தை மாதப் பலன்கள்: `மேஷம் முதல் துலாம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
ராகுல் காங்கிரஸை பாதுகாக்க முயற்சிக்கிறாா்: நான் நாட்டை காப்பாற்ற போராடுகிறேன்: கேஜரிவால்
புது தில்லி: ‘நான் நாட்டை காப்பாற்ற முயற்சிக்கும் நிலையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி காங்கிரஸை பாதுகாக்க முயற்சித்து வருகிறாா்’ என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் விமா்சனம் செய்தாா்.
தில்லி தோ்தல் பிரசாரத்தின்போது கேஜரிவால் குறித்த ராகுலின் விமா்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த விமா்சனத்தை அவா் முன்வைத்தாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கேஜரிவால் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிரசாரத்தின்போது என்னைக் குறித்து ராகுல் முன்வைத்த விமா்சனத்து பதிலளிக்க விரும்பவில்லை. ஏனெனில், அவா் காங்கிரஸை பாதுகாக்க முயற்சிக்கிறாா். நான் நாட்டை காப்பாற்ற போராடுகிறேன்’ என்று குறிப்பிட்டாா்.