காஸா போர் நிறுத்தத்திற்கு எதிராக வாக்களித்த அமெரிக்கா! உலக நாடுகள் கண்டனம்!
ராகுல் வேண்டுமென்றே ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்: பாஜக
தேர்தல் ஆணையத்திற்கு திரான தனது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாட்டில் ஜனநாயகத்தை வேண்டுமென்றே பலவீனப்படுத்த முயற்சிக்கிறார் ராகுல்காந்தி என பாஜகவின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார்.
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய சட்ட அமைச்சர்,
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றுகளை நிராகரித்த அவர் ராகுல் காந்தி நாட்டில் அராஜகத்தை உருவாக்க முயற்சிக்கிறார். அவர் திட்டமிட்டு, வேண்டுமென்றே நாட்டில் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
முன்னதாக, தேர்தல் ஆணையத்திற்கு எதிரான வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஜெனரல் இசட் அரசியலமைப்பைக் காப்பாற்றுவார்கள், ஜனநாயகத்தைப் பாதுகாப்பார்கள், வாக்குத் திருட்டை நிறுத்துவார்கள் என்று வியாழக்கிழமை ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம் ராகுல் காந்தி என்ன சொல்கிறார்? நாட்டில் வன்முறையை ஊக்குவிக்க முயற்சிக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசியலமைப்பு அமைப்புகள் மீது ராகுல்காந்தி மீண்டும் மீண்டும் பொய்யான தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார்.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் கண்ணியத்தை அவர் குறைத்து வருகிறார். தேர்தல் ஆணையத்திற்கு எதிரான ராகுலின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் இந்திய ஜனநாயகத்தின் மீது காங்கிரஸின் நம்பிக்கையின்மையைப் பிரதிபலிக்கின்றது. வரவிருக்கும் தேர்தல்களில் காங்கிரஸ் அவமானகரமான தோல்வியைச் சந்திப்பார்கள் என்று பிரசாத் கூறினார்.