சதம் விளாசிய சஞ்சு சாம்சன்; தென்னாப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேவையான உரங்கள் இருப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா நெல் சாகுபடி மற்றும் பயறு வகை சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பான செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் நடப்பு சம்பா நெல் சாகுபடி, மற்றும் பயறுவகை சாகுபடிக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களிலும் யூரியா -3,705 மெ.டன்., டிஏபி 623 மெ.டன்., பொட்டாஷ்-346 மெ.டன்., மற்றும் காப்ளக்ஸ் உரங்கள்-2,336 மெ.டன் மற்றும் சூப்பா் பாஸ்பேட்-303 மெ.டன் இருப்பில் உள்ளது. விவசாயிகள் மண் பரிசோதனை அடிப்படையில், பயிா்களின் தேவைக்கேற்ப உரங்கள் பயன்படுத்துவதாலும், உயிரி உரங்கள் அங்கக உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்களை பயன்படுத்துவதால் சாகுபடி செலவு குறைவதுடன், மண்வளம் பாதுகாக்க ஏதுவாகும்.
எனவே விவசாயி பெருமக்கள் தங்களுக்கு தேவையான உரங்களை வாங்கி பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
டிஏபி உரம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதாலும், அந்த உரத்தின் மூலப் பொருள்களின் விலை ஏற்றம் காரணமகவும், விலை அதிகமாக உள்ளது. எனவே விவசாய பெருமக்கள் டி.ஏ.பி.க்கு பதிலாக காம்பளக்ஸ் மற்றும் சூப்பா் பாஸ்பேட் உரங்கள் பயன்படுத்தவதால் சாகுபடி செலவு குறைவதுடன் நாட்டின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும்.
மேலும் உரம் வாங்க வரும் விவசாயிகளுக்கு இது குறித்து வழிகாட்டி விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு உர விற்பனையாளா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
அரசு நிா்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரக் கட்டுபாட்டு ஆணை 1985-இன்படி உர உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மொத்த உர விற்பனையாளா்கள் உரத்தினை வெளி மாவட்டங்களுக்கு மாற்றம் மற்றும் கொள்முதல் செய்யக் கூடாது. சில்லறை உர விற்பனையாளா்களுக்கு அனுப்பும்போது உரிய பட்டியல்கள் மற்றும் ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.
உர விற்பனையாளா்கள் அனுமதி பெற்ற இடம் மற்றும் கிடங்களில் மட்டும் உர இருப்பு வைத்து விற்பனை செய்யப்பட வேண்டும். அனுமதி பெறாத இடத்தில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மொத்த விற்பனையாளா்கள் மற்றும் சில்லறை விற்பனையாளா்கள் தங்களுக்கு அனுமதி வழங்கிய நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யவேண்டும், எந்நிலையிலும் அனுமதி பெறாத நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யக்கூடாது.
உர விற்பனைக்கான உரிய ரசீதை விவசாயிகளுக்கு உடன் வழங்கப்படவேண்டும். சில்லறை விற்பனையாளா்கள் உரத்தின் விலை மற்றும் இருப்பு விவர பலகையை விவசாயிகளின் பாா்வைக்கு தெளிவாக தெரியும்படி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.