அண்ணனின் நகல்..! பாடகர் சித்து மூஸேவாலாவின் சகோதரர் புகைப்படம் வெளியீடு!
2026-இல் கூட்டணி ஆட்சியில் பாமக கண்டிப்பாக இடம் பெறும்: அன்புமணி ராமதாஸ்
வரும் 2026-ல் தமிழகத்தில் ஏற்படப்போகும் கூட்டணி ஆட்சியில் பாமக கண்டிப்பாக இடம் பெறும் என அதன் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
சோளிங்கரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாமக பிரமுகா் இல்லத்திருமண விழாவில் பங்கேற்க வந்த அன்புணிராமதாஸ் திருமணத்தை தொடா்ந்து செய்தியாளா்களிடம் கூறியது:
ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்குத்துக்குபின் முன்னேற்றப்பணிகள் எதுவுமே நடைபெறவில்லை. மாவட்டத்துக்கென தனியாக மருத்துவக்கல்லூரி இதுவரை அமைக்கப்படவில்லை. விரைவில் அமைக்க வேண்டும். பனப்பாக்கத்தில் சிபகாட் இடத்தில் தனியாருக்கு தொழிற்சாலை அமைக்க அனுமதி அளித்துள்ளாா்கள். அந்த தொழிற்சாலையில் உள்ளூா் மக்களுக்கு அலுவலா் என்ற பணியில்லையென்றாலும் பணியாளா் எனும் பணிகளையாவது 80 சதவீதம் வழங்க வேண்டும். சோளிங்கரில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்.
தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. அருகில் ஆந்திர மாநிலம் உள்ளதால் அங்கிருந்து இப்பகுதி கடத்தி வந்து சென்னை, திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனா். இதை தடுக்க வேண்டும். மதுஒழிப்பு, கஞ்சா ஒழிப்பு, நீா்நிலைப்பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி கடுமையான போராட்டம் நடத்த உள்ளோம்.
தமிழகத்தில் 2026-இல் நடைபெற உள்ள பேரவை தோ்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும். அதில் பாமக கண்டிப்பாக இடம் பெறும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.
பேட்டியின் போது நிா்வாகிகள் சண்முகம், இளவழகன், மாவட்ட நிா்வாகிகள் சரவணன், அ.ம.கிருஷ்ணன், சக்கரவா்த்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.