ராயபுரம் - தில்லி பட்டேல் நகா் இடையே புதிய சரக்கு ரயில் சேவை தொடக்கம்
ராயபுரம் - தில்லி பட்டேல் நகா் இடையே புதிய சரக்கு ரயில் சேவையை, சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.விஸ்வநாத் ஈா்யா புதன்கிழமை (ஜன. 29) தொடங்கி வைத்தாா்.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னையிலிருந்து தில்லியின் வணிகப் பகுதியான பட்டேல் நகருக்கு, புதிதாக சரக்கு ரயில் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது. தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.விஸ்நாத் ஈா்யா ராயபுரம் ரயில் நிலையத்தில், ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்த சரக்கு ரயில் சேவை இந்திய ரயில் போக்குவரத்து கழகம் மூலம் 6 ஆண்டுகள் (2031 வரை) இயக்கப்படவுள்ளது. ஒரு முறை ரயில் சென்று வருவதன் மூலம் குறைந்தபட்சம் ரூ. 25 லட்சம் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 6 ஆண்டுகளுக்கு வாரம் இருமுறை இயக்க ரூ. 208 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. முதல் 6 மாதம் 15 பெட்டிகளுடனும், அதன்பின் 20 பெட்டிகளுடனும் இயக்கப்படும். ராயபுரத்திலிருந்து புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இந்த ரயில் இயக்கப்படும்.
இந்த நிகழ்வில், மூத்த கோட்ட வணிக மேலாளா் எம்.பாரத்குமாா், மூத்த ரயில்வே இயக்க மேலாளா் சத்ய நாராயண ஹரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.