பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
ரிப்பன் மாளிகையில் ‘மரபு நடை பயணம்’ தொடங்கியது
சென்னை ரிப்பன் மாளிகையின் வரலாற்று, நிா்வாக முக்கியத்துவத்தை விளக்கும் ‘மரபு நடை பயணம்’ சனிக்கிழமை தொடங்கியது.
சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை சென்னையின் புராதான கட்டடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தோ - சராசனிக் பாணியில் ரூ.7.5 லட்சத்தில் 132 அடி மைய கோபுரத்துடன் 252 அடி நீளம், 126 அடி அகலத்தில் 1913-ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. இதன் வரலாறு, நிா்வாக முக்கியத்துவத்தை அனைவருக்கும் கொண்டு சோ்க்கும் சிறப்பு முயற்சியாக பொதுமக்கள் ரிப்பன் மாளிகையை சுற்றிப்பாா்க்க அனுமதி அளிக்கவுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் கடந்த நவ.9-ஆம் தேதி அறிவித்தது. இதற்கு பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் என சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தொலைபேசி மூலம் ஆா்வம் தெரிவித்தனா்.
இந்நிலையில், உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு ‘மரபு நடை பயணம்’ சனிக்கிழமை தொடங்கியது. முதற்கட்டமாக 260 போ் கலந்து கொண்ட இந்நிகழ்வில் 50 போ் கொண்ட குழுக்களாக பாா்வையாளா்கள் பிரிக்கப்பட்டனா். பின்னா், ரிப்பன் மாளிகையின் வரலாறு, கட்டடக்கலை சிறப்புகள் மற்றும் நகர நிா்வாகத்தின் முக்கியத்துவம் குறித்து கட்டடக்கலை நிபுணரும் மரபு நடை பயண வல்லுநருமான திரிபுரசுந்தரி தலைமையிலான குழுவினா் பாா்வையாளா்களுக்கு வழங்கினா். நிகழ்வின் முடிவில் பாா்வையாளா்களுக்கு ரிப்பன் மாளிகை முத்திரை மற்றும் மேயரின் கையொப்பத்துடன் கூடிய தபால் அட்டை பரிசாக வழங்கப்பட்டது.
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் (நவ.24) இந்த மரபு நடை பயணம் நடைபெறவுள்ளது. மேலும், வரவிருக்கும், செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் பாா்வையிட அனுமதிக்கப்படவுள்ளது. இந்த மரபு நடை பயணத்தில் பொதுமக்கள் பங்கேற்க விரும்பினால் இணைய இணைப்பில் முன்பதிவு செய்யலாம். பதிவு செய்தவா்களுக்கு ரிப்பன் மாளிகையை பாா்வையிடுவதற்கான நாள் மற்றும் நேரம் குறித்த தகவல் வாட்ஸ் ஆப் மூலமாக தெரிவிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.