குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
ரியல் மாட்ரிட்தான் உலகின் சிறந்த கிளப்..! வினிசியஸ் பெருமிதம்!
ஆர்பி சால்ஸ்பர்க் உடனான சாம்பியன் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 5-1 என வெற்றி பெற்றது.
ரோட்ரிகோ (23’, 34’) 2 கோல்கள், கிளியன் எம்பாப்பே (48’) 1 கோலும் வினிசியஸ் ஜூனியர் (55’,77’) 2 கோல்களும் அடித்து அசத்தினார்கள்.
இந்த வெற்றிக்காக வினிசியஸ் ஜூனியருக்கு மதிப்பு மிக்க வீரர் விருது அளிக்கப்பட்டது.
எனக்கு இந்த விருது கிடைத்தது ஆச்சரியமாக இருக்கிறது. இது ரோட்ரிகோ அல்லது ஜூட் பெல்லிங்ஹாமுக்கு கொடுத்திருக்கலாம் என வினிசியஸ் கூறினார்.
இதில் வினிசியஸ் ஜூனியர் ரியல் மாட்ரிட் அணிக்காக தனது 100ஆவது கோலை அடித்தது அசத்தினார்.
ரியல் மாட்ரிட்தான் உலகின் சிறந்த கிளப்
விருதுக்குப் பிறகு வினிசியஸ் பேசியதாவது:
எனக்கு இந்தக் கோப்பை கொடுத்தது ஆச்சரியமாக இருக்கிறது. இது ரோட்ரிகோ அல்லது ஜூட் பெல்லிங்ஹாமுக்கு கொடுத்திருக்கலாம். ஏனெனில் எனது முதல் பாதி ஆட்டம் சுமாராகவே இருந்தது. அணியின் உதவியினால் நான் இரண்டாம் பாதியில் நன்றாக விளையாடினேன்.
உலத்திலேயே மிகச் சிறந்த கால்பந்துக் கழகம் என்றால் அது ரியல் மாட்ரிட்தான். அதற்காக 100 கோல்கள் அடித்தது மகிழ்ச்சி.
அடுத்ததாக எனது மனநிலையை அமைதியாக வைத்துக்கொண்டு எனது ஆட்டத்தை முன்னேற்றுதுவதுதான். இந்த அணியில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு.
இந்தச் சீருடையில் அதிகமான கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பது எனது கனவு என்றார்.