குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
ரியல் மாட்ரிட் அணிக்காக 100 கோல்கள் அடித்த வினிசியஸ் ஜூனியர்!
ஆர்பி சால்ஸ்பர்க் உடனான சாம்பியன் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 5-1 என வெற்றி பெற்றது.
இதில் வினிசியஸ் ஜூனியர் ரியல் மாட்ரிட் அணிக்காக தனது 100ஆவது கோலை அடித்தது அசத்தினார்.
ரோட்ரிகோ (23’, 34’) 2 கோல்கள், கிளியன் எம்பாப்பே (48’) 1 கோலும் வினிசியஸ் ஜூனியர் (55’,77’) 2 கோல்களும் அடித்து அசத்தினார்கள்.
இந்த வெற்றிக்காக வினிசியஸ் ஜூனியருக்கு மதிப்பு மிக்க வீரர் விருது அளிக்கப்பட்டது.
பிரேசிலை நாட்டைச் சேர்ந்த வினிசியஸ் ஜூனியருக்கு கடந்த முறை பேலந்தோர் விருது வழங்காததால் ரியல் மாட்ரிட் அணி அந்த விழாவினை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 16ஆவது இடத்தில் இருக்கிறது ரியல் மாட்ரிட். பார்சிலோனா 2ஆவது இடத்திலும் லிவர்பூல் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
டாப் 8க்குள் ரியல் மாட்ரிட் நுழையவிட்டாலும் நாக்-அவுட் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும். அதில்வென்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதிபெற வேண்டும்.
சாம்பியன் லீக்கில் 15 முறை பட்டம் வென்று அசத்தியுள்ள ரியல் மாட்ரிட் அணி இந்தமுறை டாப் 8க்குள் நுழையாமல் பின் தங்கியுள்ளது.