ரூ. 100 கோடி பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன் - 2!
மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது.
முக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். அப்படம் வெளியானபோது நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் படத்தில் இடம்பெற்ற, ‘பார்த்தேனே‘ பாடல் ஹிட் அடித்தது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. இப்பாகத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சுந்தர் சி இயக்குகிறார்.
இதையும் படிக்க: ஜெயிலர் - 2 படப்பிடிப்பு அப்டேட்!
இப்படத்தின் பூஜை நேற்று (மார்ச் 5) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், நடிகைகள் நயன்தாரா, ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்களே இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் பூஜை ரூ. 1 கோடி செலவில் நடைபெற்றதாகவும் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்திய மொழிகளில் உருவாகவுள்ளதையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் துனியா விஜய், ரெஜினா கேசண்ட்ரா, யோகிபாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.