ரூ. 33 கோடியில் மீன்வளத் துறை ஒருங்கிணைந்த கட்டடம், இறங்குதளம் திறப்பு
தூத்துக்குடி மீன்வளத் துறை இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் ரூ. 33 கோடியில் ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடம், திரேஸ்புரம், சிப்பிகுளம் ஆகிய இடங்களில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி இறங்குதளம் ஆகியவற்றை சென்னையிலிகுந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட மீன்வளத் துறை இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் குத்துவிளக்கேற்றி பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், தூத்துக்குடி மீன்பிடி துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளா் கணபதி ரமேஷ், உதவி செயற்பொறியாளா் ஜெயசுதா, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் விஜயராகவன், உதவிப் பொறியாளா் தயாநிதி, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆய்வாளா்கள் பெல்சி ஷிபானி, அக்னிகுமாா் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், மீனவா்கள் பலா் பங்கேற்றனா்.