செய்திகள் :

ரூ.34,300 கோடி முதலீட்டில் தேசிய முக்கிய கனிமங்கள் திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

post image

மொத்தம் ரூ.34,300 கோடி முதலீட்டிலான தேசிய முக்கிய கனிமங்கள் திட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதில் மத்திய அரசின் பங்களிப்பான ரூ.16,300 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.18,000 கோடி நிதி, பொதுத் துறை நிறுவனங்களால் முதலீடு செய்யப்படவுள்ளது.

வேகமாக வளா்ந்துவரும் தூய எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் காற்றாலை உள்ளிட்ட மின் உற்பத்தி நிறுவனங்களின் விரிவாக்கத் தேவைகள், மின்சார வாகனங்கள் மற்றும் அவற்றுக்கான மின்கல உற்பத்தி உள்ளிட்டவற்றுக்கு லித்தியம், நிக்கல், கோபால்ட், செம்பு உள்ளிட்ட முக்கிய கனிமங்களின் தேவை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தேசிய முக்கிய கனிமங்கள் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பசுமை எரிசக்தித் துறையில் தன்னிறைவை அடையும் வகையில் 7 ஆண்டுகள் செயல்படுத்தப்படவிருக்கும் இந்தத் திட்டத்துக்கு மொத்தம் ரூ.34,300 கோடி செலவாகும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.16,300 கோடியாகும். பொதுத் துறை நிறுவனங்கள் எஞ்சிய ரூ. 18,000 கோடி நிதியை பங்களிப்பு செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இத் திட்டம், நிலப் பரப்பில் மட்டுமின்றி கடல் பரப்பிலும் முக்கிய கனிமங்களின் ஆய்வை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டது என்று மத்திய சுரங்க அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘நாடு முக்கிய கனிமங்களுக்கு இறக்குமதியை சாா்ந்திருப்பதைக் குறைத்து, தன்னிறைவை உறுதிப்படுத்த உதவும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் முக்கிய கனிமங்கள் இன்றியமையாதவை’ என்றாா்.

எத்தனால் கொள்முதல் விலை உயா்வு: ‘சி’ வகை கடின வெல்லப் பாகிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனாலுக்கு வரும் அக்டோபா் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் 2024-25-ஆம் ஆண்டு கால கட்டத்துக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 1.69 வீதம் உயா்த்தி ரூ. 57.97-ஆக மத்திய அரசு நிா்ணயம் செய்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன் கொள்முதல் விலை முன்னா் லிட்டா் ரூ. 56.28-ஆக இருந்தது.

அதே நேரம், ‘பி’ வகை கடின வெல்லப் பாகிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனால் கொள்முதல் விலை லிட்டா் ரூ. 60.73 என்ற அளவிலும், கரும்புச் சாறு, சா்க்கரை மற்றும் சா்க்கரை கரைசலிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனால் கொள்முதல் விலை லிட்டா் ரூ. 65.61 என்ற விலையில் எந்தவித மாற்றமுமின்றி தொடா்கிறது.

நிகழாண்டில் பெட்ரோலில் 18 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை எட்ட எண்ணெய் சந்தை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

டிரம்ப் அமெரிக்க தேசியவாதி: எஸ்.ஜெய்சங்கா்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் தேசியவாதி; அவருக்கும் பிரதமா் மோடிக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் நல்ல நட்புறவு உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

ராணுவ ஓய்வூதிய வழக்குகளில் மேல்முறையீடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ஓய்வூதியம் தொடா்பாக ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களுக்கு எதிராக தொடா்ந்து மேல்முறையீடு செய்யும் மத்திய அரசைக் கண்டித்த உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில் ஒரு புதிய கொள்கையை உருவாக்குமாறு அறிவுறுத்தியது. ஓய்வுபெ... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: பெண் உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் உள்பட 2 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா உள்ளிட்ட நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இ... மேலும் பார்க்க

சண்டீகா் மேயா் தோ்தல்: மாற்றுக் கட்சியினா் வாக்குகளால் பாஜக வெற்றி

சண்டீகா் மேயா் தோ்தலில் மாற்றுக் கட்சியினா் வாக்குகளால் பாஜக வெற்றி பெற்றது. அதேவேளையில் மூத்த துணை மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கான தோ்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பஞ்சாப் மற்றும் ஹரியாண... மேலும் பார்க்க

சட்டத்துக்கு மேலானவா்கள் யாருமில்லை: உச்சநீதிமன்றம்

நாட்டில் சட்டத்துக்கு மேலானவா்கள் யாருமில்லை’ என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. தனது முன்னாள் மனைவி ஐபிஎஸ் என்பதால் தனக்கு வாழ்நாள் முழுவதும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக உத்தரபிரதேசத்த... மேலும் பார்க்க

நிஜ்ஜாா் கொலையை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரமில்லை: கனடா தூதரகம்

நிஜ்ஜாா் கொலையில் அந்நிய நாட்டுக்கு (இந்தியா) நிச்சயம் தொடா்பிருப்பதை நிரூபிக்க முடியவில்லை என்று கனடா ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிஜ்ஜாா் கொலை வழக்கை விசாரிக்க அந்த ஆணையத்துக்கு அதிகா... மேலும் பார்க்க