உ.பி. கோயில் படிக்கிணறில் மிகப் பிரமாண்ட சுரங்கம் கண்டுபிடிப்பு!
ரூ.5 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சேவூா் ஊராட்சி மாங்காமரம் பேருந்து நிறுத்தம் அருகில் ரூ.5 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பக்க கால்வாயுடன் கூடிய தாா்ச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சேவூா் ஊராட்சி மாங்காமரம் பேருந்து நிறுத்தத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு சாலை விரிவாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் இரும்பேடு புறவழிச் சாலையிலிருந்து ஆரணி காமராஜா் சிலை வரை சுமாா் 2.4 கி.மீ. தொலைவுக்கு ஆற்காடு-விழுப்புரம் சாலையில் தாா்ச் சாலை மற்றும் 600 மீட்டா் சிறுபாலம், பக்க கால்வாயுடன் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான திட்டப் பணியை ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் ஜெயபிரகாஷ், நகரச் செயலாளா் அசோக்குமாா், நகராட்சி உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், ராமகிருஷ்ணன், குமரன், கிளை செயலாளா்கள் ஜோதி, தா்மன் மற்றும் ஒப்பந்ததாரா் பாஸ்கர ரெட்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.