செய்திகள் :

ரூ. 59,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!! வெள்ளியும் புதிய உச்சம்!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 58,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், தொடர்ந்து விலை உயர்ந்து வருகின்றது.

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, ரூ. 58,400-க்கு விற்பனையான நிலையில், நேற்று விலையில் மாற்றமின்றி விற்பனை ஆனது.

இதையும் படிக்க : வங்கக் கடலில் புயலாக மாறிய டானா!

இந்த நிலையில், புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,340-க்கும், ஒரு சவரன் ரூ. 58,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,795-க்கும், ஒரு சவரன் ரூ. 58,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியும் உச்சம்

சென்னையில் கடந்த வாரம் ஒரு கிராம் வெள்ளி 107-க்கும் விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ரூ. 110-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை கிராமுக்கு அதிரடியாக ரூ. 2 உயர்ந்து ரூ. 112-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,12,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஹெச்டிஎஃப்சி வட்டி வருவாய் 10% அதிகரிப்பு

நாட்டின் மிகப்பெரிய தனியாா் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் நிகர வட்டி வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் கடும் சரிவு: 27 நிறுவனங்களில் பங்குகள் வீழ்ச்சி - ரூ.9 லட்சம் கோடி இழப்பு!

வாரத்தின் 2வது வணிக நாளான இன்று (அக். 22) பங்குச் சந்தை சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்தன. நிஃப்டி 24,500 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 27 நிறுவனங்களின் பங்கு... மேலும் பார்க்க

எழுச்சியில் தொடங்கி சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

நமது நிருபா்மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை எழுச்சியிலேயே தொடங்கி சரிவுடன் முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை சரிவுடன் முடிவு! ஐடி, உலோகத் துறை பங்குகள் சரிவு!

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (அக். 21) பங்குச் சந்தை சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 73 புள்ளிகள் சரிந்தன. நிஃப்டி 25 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழ் சரிந்தது. மேலும் பார்க்க

38% அதிகரித்த ஆடம்பர வீடுகள் விற்பனை

கடந்த ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை இந்தியாவின் முக்கிய ஏழு நகரங்களில் 38 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து மனை-வா்த்தக ஆலோசனை நிறுவனமான ச... மேலும் பார்க்க

3 நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை : பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மூன்று நாள் சரிவுக்குப் பிறகு இன்று மீண்டும் மீண்டது.இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் வங்கி பங்குகள் அதிக அளவு கொள்முதல் செய்ததும், உல... மேலும் பார்க்க