செய்திகள் :

ரொனால்டோ 2 கோல்கள்; போர்ச்சுகல் அபார வெற்றி: மறைந்த வீரருக்கு மரியாதை!

post image

உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகலின் அணி 5-0 என அபார வெற்றி பெற்றது.

40 வயதிலும் ரொனால்டோவின் அசத்தலான கோல்களால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அர்மீனியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகல் அணி 5-0 என அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஜாவோ பெலிக்ஸ் 10, 61ஆவது நிமிஷங்களில் கோல் அடிக்க, ரொனால்டோ 21,46-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்.

ஜாவோ கன்செலோ 32-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார். இந்தப் போட்டியில் 72 சதவிகித பந்தினை போர்ச்சுகல் அணி தன் கட்டுக்குள் வைத்திருந்தது.

குரூப் எஃப் அணிகளில் முதல் அணியாக போர்ச்சுகல் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ரொனாடோ மொத்தமாக 942 கோல்களும் சர்வதேச போட்டிகளில் 140 கோல்களையும் நிறைவு செய்துள்ளார்.

மறைந்த வீரருக்கு மரியாதை

கார் விபத்தில் மறைந்த தியாகோ ஜோடாவிற்கு போர்ச்சுகல் அணியினரும் ரசிகர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

கோல் அடுத்து சில வீரர்கள் ஜோடாவின் பாணியில் கொண்டாடிதும் சமூக வலைதளத்தில் வைரலானது.

Portugal's team won a resounding 5-0 in the World Cup qualifier.

குட் பேட் அக்லி படத்தில் இளையாராஜா பாடல்களை பயன்படுத்த தடை!

‘குட் பேட் அக்லி’ படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இசையமைப்பாளா் இளையராஜா சார்பில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில... மேலும் பார்க்க

வைஷாலி முன்னிலை!

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில், 4-ஆவது சுற்று முடிவில் இந்தியாவின் ஆா்.வைஷாலி இணை முன்னிலையில் இருக்கிறாா்.அந்த சுற்றில், வைஷாலி - ஜொ்மனியின் டினாரா வாக்னருடன் டிரா செய்ய, ... மேலும் பார்க்க

கோப்பையை தக்கவைத்தாா் சபலென்கா!

அமெரிக்காவில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸில், மகளிா் ஒற்றையா் பிரிவில் நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டாா்.இறுதிச்சுற்றில், உலகின் நம... மேலும் பார்க்க

வரலாறு படைத்தது இந்திய ஆடவா் அணி! உலக சாம்பியன்ஷிப்பில் முதல் தங்கம்!

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில் காம்பவுண்ட் பிரிவில் இந்திய ஆடவா் அணி ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்றது. போட்டியின் வரலாற்றில் இந்திய ஆடவா் அணி தங்கம் வென்றது இதுவே முத... மேலும் பார்க்க

டி20 தொடரை வென்றது இலங்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட்டில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது. அந்த அணி 2-1 என தொடரையும் கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் முதலில் ஜிம்பாப்வே 20 ஓவா... மேலும் பார்க்க

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

சின்ன திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் இன்று (செப். 7) நடைபெற்றது.சமீபத்தில் நடைபெற்ற சின்ன திரை நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் (2025-2028) அறிமுக வ... மேலும் பார்க்க