Thiruvarur Vijay Full Speech | Thiruvarur Campaign | M.K.Stalin | TVK | DMK
லத்தூரில் கனமழை: 40 மணி நேரத்திற்குப் பிறகு 5 பேரின் சடலங்கள் மீட்பு
லத்தூரில் பெய்த கனமழையின்போது அடித்துச் செல்லப்பட்ட 5 பேரின் சடலங்கள் 40 மணி நேர தேடலுக்குப் பிறகு மீட்கப்பட்டன.
மகாராஷ்டிராவின் லாத்தூர் கடந்த இரண்டு நாள்களாக இடைவிடாத மழையால் தத்தளித்து வருகிறது. இதனால் பயிர்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. செவ்வாய்க்கிழமை காலை சுதர்ஷன்(27) என்பவர் வயல்களில் இருந்து திரும்பியபோது ஆற்றில் மூழ்கி பலியானார்.
அதே நாளில் ஜல்கோட் வட்டத்தில் உள்ள பாலத்தின் மீது தண்ணீர் பாய்ந்ததால் ஆட்டோரிக்ஷாவில் இருந்த ஐந்து பேர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இரவு 8 மணிக்கு சம்பவம் நடந்தபோது ஆட்டோரிக்ஷாவில் அவர்கள் மல்ஹிப்பர்காவுக்குச் சென்றனர். இதையடுத்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை மற்றும் போலீஸார் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 40 மணி நேர தேடலுக்குப் பிறகு 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
திருவனந்தபுரத்தில் பாஜக கவுன்சிலர் சடலமாக மீட்பு
இதுகுறித்து அதிகாரி கூறுகையில், 40 மணி நேர தேடுதலுக்குப் பிறகு வியாழக்கிழமை கோஷெட்டி, ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் சங்க்ராம் சோன்காம்ப்ளே மற்றும் பயணி விட்டல் காவ்லே ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.
உத்கீரைச் சேர்ந்த வைபவ் புண்டலிக் கெய்க்வாட் (24) மற்றும் சங்கீதா முர்ஹரி சூர்யவன்ஷி (32) ஆகியோரின் உடல்கள் டோங்கர்கான் ஏரியில் கண்டெடுக்கப்பட்டன.
மாவட்டத்தில் ஏற்பட்ட இழப்பு ரூ.480 கோடி இருக்கும். இருப்பினும் விரிவான சேத மதிப்பீட்டிற்குப் பிறகு சரியான விவரம் கிடைக்கும் என்றார்.