செய்திகள் :

லோகாவால் இந்த அபாயம் இருக்கிறது: ஜித்து ஜோசஃப்

post image

லோகா திரைப்படம் குறித்து இயக்குநர் ஜித்து ஜோசஃப் பேசியுள்ளார்.

ஓணம் வெளியீடாகத் திரைக்கு வந்த லோகா திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. துல்கர் சல்மான் தயாரிப்பில் நடிகர்கள் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் நடித்த லோகா சூப்பர் ஹீரோ கதையாக உருவானது.

டோமினிக் அருண் இயக்கிய இப்படம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் ஜித்து ஜோசஃப், “திரைத்துறையில் பல்வேறு வகையான திரைப்படங்கள் உருவாக வேண்டும். லோகாவின் வெற்றியால் இனி தொடர்ந்து சூப்பர் ஹீரோ கதைகளில் கவனம் செலுத்துவார்கள். சினிமாவுக்கு இது அபாயமானது.

முக்கியமாக, இனி வேறு பாணி திரைப்படங்களை எடுத்து அதை வெற்றி பெறச் செய்வது சவாலான விஷயம். நான் எல்லா வகையான திரைப்படங்களையும் எடுக்கவே விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஜித்து ஜோசஃப் இயக்கிய மிராஜ் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இதையும் படிக்க: செப். 25-ல் மறுவெளியீடாகிறது விஜய்யின் குஷி படம்!

director jeethu joseph talks about lokah movie success

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.உலகின் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரமும், ஆர்ஜென்டீனா அண... மேலும் பார்க்க

ரேஷ்மாவின் புதிய சீரியல்: ராமாயணம் தொடரின் நேரத்தை மாற்ற வேண்டாம் என கோரிக்கை!

ராமாயணம் தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில் ரேஷ்மா முரளிதரன் நடிக்கும் புதிய தொடர் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக வெளியான தகவலையடுத்து, ராமாயணம் தொடரின் ஒளிபரப்பு நேரத்தை மாற்ற வேண்டாம் என்று ரசிகர்கள் கோரிக்... மேலும் பார்க்க

ஹாலிவுட் தொடரில் நடிக்கும் சித்தார்த்!

நடிகர் சித்தார்த் ஹாலிவுட் இணையத் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகராக இருப்பவர் நடிகர் சித்தார்த். இவர் இறுதியாக நடித்த சித்தா, மிஸ் யூ, 3 பிஎச... மேலும் பார்க்க

இரண்டாவது திருமணமா? மீனா பதில்!

நடிகை மீனா இரண்டாவது திருமண வதந்தி குறித்து பேசியுள்ளார்.தென்னிந்தியளவில் பிரபல நடிகையாக இருப்பவர் மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், வீரா படத்தில் ரஜினிக்கே ... மேலும் பார்க்க

மகாநதி தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்!

மகாநதி தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவர் மாற்றப்பட்டுள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர், கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் திங்கள் ... மேலும் பார்க்க

ரூ. 500 கோடி வசூலித்தும் ஏமாற்றத்தைக் கொடுத்த கூலி!

கூலி திரைப்படத்தின் வணிகம் விநியோகஸ்தர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் கடந்த ஆக.14 ஆம் தேதி வ... மேலும் பார்க்க