செய்திகள் :

ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டம்; சாதனை படைத்து அசத்திய தமிழக வீரர்!

post image

சீனாவில் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்கேட்டிங் வீரரான ஆனந்த குமார் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்திருக்கிறார்.

உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலாவதாக நடந்த சீனியர் ஆண்களுக்கான 500 மீ பிரிவில் 43.072 வினாடிகளில் ஸ்கேட்டிங் செய்து வெண்கல பதக்கத்தை உறுதி செய்திருந்தார். இதையடுத்து நடந்த ஆண்களுக்கான 1000 மீ பிரிவில் சிறப்பாக செயல்பட்ட ஆனந்த குமார், ஒரு நிமிடம் 24 வினாடிகளில் (1:24.924) முதலாவதாக முடித்து தங்கத்தை தட்டிச் சென்றிருக்கிறார்.

ஸ்கேட்டிங் சாம்பியன் ஆனந்த குமார்

இந்த வெற்றியின் மூலம் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் சீனியர் அரங்கில் தங்கம் வென்ற முதல் இந்தியரும், தமிழருமானார் ஆனந்த்குமார். 2021ல் நடந்த ஜூனியர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்று ஆனந்த்குமார் சாதனைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஸ்கேட்டிங் சாம்பியன் ஆனந்திற்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல நேற்று நடந்த ‘பிடே’ கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் மகளிர் பிரிவில் இறுதிப் போட்டியில் வைஷாலி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறார். இன்னொரு பக்கம் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கிறார் ஆனந்த்குமார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி செஸ் போர்டிலும், ஆனந்த் குமார் ஸ்கேட்டிங் போர்டிலும் உலக அளவில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்ந்த்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள்; பாகிஸ்தான் கேப்டன் அதிருப்தி! - ஆசியக் கோப்பையில் நடந்தது என்ன?

'இந்தியா vs பாகிஸ்தான்'ஆசியக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி முடிந்த பிறகு, பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய அணியின் வீரர்கள் கைகுலுக்க மறுத்த சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.India vs... மேலும் பார்க்க

Ind Vs Pak: எதிர்ப்புகளைத் தாண்டி மோதும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள்! வெற்றி யார் பக்கம்?

இன்று துபாயில் நடக்கும் ஆசிய கோப்பை 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் கிரிக்கெட் போட்டி என்றாலே ஆர்வத்திற்கும், விறுவிறுப்பிற்கும் பஞ்சமி... மேலும் பார்க்க

FMI MiniGP: ஜெர்மனியில் வெற்றி; அடுத்தது உலகக்கோப்பை தான் - அஜித் வாழ்த்திய இந்த இளம் ஹீரோ யார்?

சென்னையைச் சேர்ந்த ஜேடன் இம்மானுவேல் என்ற 13 வயது சிறுவன் FMI மினி ஜிபி மோட்டார் பைக் பந்தயத்தில் மூன்றாவது இடம் வென்றதைத் தொடர்ந்து, நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், உலக அளவிலான பந்தயத்தில்... மேலும் பார்க்க

Battle of the Sexes: பெண்கள் சம உரிமைக்காக ஆணுடன் போட்டிபோட்ட வீராங்கனை - பில்லி ஜீன் கிங்கின் கதை!

மனித பரிமாணத்தின் பகுதியாகவே சமூக கட்டமைப்பு உருவாகிறது. நாகரிகங்களின் தொடக்கம் முதல் இந்த கட்டமைப்பு பல்வேறு நிலைகளில், பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்குமான பொறுப்புகள் ஒவ்... மேலும் பார்க்க

Skin Cancer: "உங்கள் தோலைப் பரிசோதியுங்கள்" - மைக்கேல் கிளார்க்கிற்கு தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு ஆறாவது முறையாக தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், ஆறாவது முறையாக தோல் ப... மேலும் பார்க்க

Lionel Messi: `கேரளா வருகிறார் லியோனல் மெஸ்ஸி' - உறுதியான தகவல்... உற்சாகமான ரசிகர்கள்!

கேரள மாநிலத்தில் கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும்போது கேரளா மாநிலம் முழுவதும் கட்அவுட்டுகள், பேனர்கள் வைத்து திருவிழா போன்று களைக்கட்ட ... மேலும் பார்க்க