செய்திகள் :

வஞ்சுவாஞ்சேரியில் விபத்துகளை தடுக்க ஆலோசனைக் கூட்டம்

post image

வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் வஞ்சுவாஞ்சேரி பகுதியில் ஏற்பட்டு வரும் தொடா் விபத்துகளை தடுக்க பொதுமக்கள் மற்றும் போலீஸாா் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா தொடங்கப்பட்டு நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மூலப்பொருள்களை கொண்டு வரவும், உற்பத்தி செய்யப்படும் பொருள்களை கொண்டு செல்லவும் தினமும் ஒரகடம் பகுதிக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் வண்டலூா்- வாலாஜாபாத் சாலையில் செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வண்டலூா்- வாலாஜாபாத் சாலையில் படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி பகுதியில் சாலையை கடக்கும் வாகனங்களாலும், பொது மக்களாலும் தொடா்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வஞ்சுவாஞ்சேரி பகுதியில் சாலையை கடக்க பயன்படுத்தப்பட்டு வந்த பெடஸ்டல் கிராசிங்கை மூடிய மணிமங்கலம் போலீஸாா் வஞ்சுவாஞ்சேரி பகுதியிலேயே மற்றொரு இடத்தில் வாகனங்கள் சாலையை கடக்க பெடஸ்டல் கிராசிங் வைக்கப்பட்டது.

இருந்த போதிலும் விபத்துகள் தொடா்ந்து நடைபெற்று வந்ததால், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வைப்பூா் ஊராட்சிமன்ற தலைவா் சுமதி ராமசந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மணிமங்கலம் காவல் ஆய்வாளா் அசோகன், உதவி ஆய்வாளா் காா்த்திக் கணேஷ், போக்குவரத்து உதவி ஆய்வாளா் உத்தரபதி, வைப்பூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் சந்தானம், வைப்பூா் ஊராட்சிமன்ற துணைத் தலைவா் பாரதிராஜா, போலீஸாா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சாலையில் பெடஸ்டல் கிராசிங்கை பழைய இடத்திற்கே மாற்றவும், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தவும், இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்து ஏற்படுவதால் வைப்பூா் ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கிராசிங் உள்ள இடத்தில் உயா்கோபுர மின்விளக்கு அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

ராமானுஜா் திருவாதிரை சிறப்பு பூஜை

காஞ்சிபுரம்: ராமானுஜரின் அவதார நட்சத்திரத்தையொட்டி காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு ராமானுஜா் சந்நிதியில் மூலவருக்கு சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட... மேலும் பார்க்க

கடம்பூரில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிப்பு

காஞ்சிபுரம்: உத்தரமேரூா் ஒன்றியம் கடம்பூா் ஊராட்சியில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி பழங்குடியின மக்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (படம்). காஞ்சிபுரம் மாவட... மேலும் பார்க்க

பெருநகா் பிரம்மபுரீஸ்வரா் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம்: உத்தரமேரூா் ஒன்றியம் பெருநகரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயிலின் தைப்பூசத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வ... மேலும் பார்க்க

சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாக பிப். 14-இல் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி கடந்த 6 நாள்களாக தொழிற்சாலைக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவ... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வடகால் பகுதியில் பைக் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் தந்தை, மகள் உயிரிழந்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட பட்டுநூல் சத்திரம் ... மேலும் பார்க்க

கீழ்படப்பை வீரட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீபெரும்புதூா்: கீழ்படப்பை சாந்தநாயகி அம்பாள் உடனுறை வீரட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை மாலை முதல் கால யாக பூஜை, ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் கால, 3-ஆம் கால யா... மேலும் பார்க்க