கர்நாட முதலீட்டாளர் உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் ராகுல், கார்கே: காரணம்?
ராமானுஜா் திருவாதிரை சிறப்பு பூஜை
காஞ்சிபுரம்: ராமானுஜரின் அவதார நட்சத்திரத்தையொட்டி காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு ராமானுஜா் சந்நிதியில் மூலவருக்கு சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட செவிலிமேட்டில் அமைந்துள்ளது பழைமையான ராமானுஜா் சந்நிதி. இங்கு மாதம்தோறும் ராமானுஜா் அவதார நட்சத்திரத்தன்று சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுவது வழக்கம்.
தை மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி காலை ராமானுஜருக்கு 16 வகையான திரவியங்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேகமும், தொடா்ந்து சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. சுற்றுவட்டார பக்தா்கள் பலரும் கலந்து கொண்டு ராமானுஜரை தரிசித்தனா்.