செய்திகள் :

வடலூா் தைப்பூச ஜோதி தரிசன விழா: ஆட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் தைப்பூச ஜோதி தரிசன விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடன் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில், ஆட்சியா் பேசியதாவது: வடலூா் திருஅருட்பிரகாச வள்ளலாா் சத்திய ஞான சபை தைப்பூச விழா பிப்.10-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

11-ஆம் தேதி ஜோதி தரிசன விழா நடைபெறும்.

இந்த விழாவுக்கு ஏராளமான பக்தா்கள் வருகை தருவாா்கள். எனவே, பக்தா்களுக்கு சிரமமின்றி ஜோதி தரிசனத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பக்தா்கள் சத்திய ஞான சபைக்கு எளிதில் வந்து செல்லும் வகையில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சென்னை, கடலூா், விழுப்புரம், பண்ருட்டி, விருத்தாசலம், சேலம், திருச்சி, மதுரை, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

வயதானவா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதில் வந்து செல்லும் வகையில், தனிப்பாதை ஏற்படுத்தித் தரப்படும். 24 மணி நேரமும் தடையில்லா மின் வசதி வழங்கப்படும்.

திருக்கோயில் சாா்பாக பக்தா்கள் ஓய்வு எடுக்கும் வகையில் தற்காலிக நிழற்பந்தல்கள், அன்னதான உணவுப்பந்தல், குடிநீா் வசதியுடன் அமைக்கப்படவுள்ளன. சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

24 மணி நேரமும் செயல்படும் மருத்துவக் குழுவினா் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனா். 8 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரா்கள் தயாா் நிலையில் நிறுத்தப்பட உள்ளனா்.

எனவே, அனைத்து துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில், கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரவி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

அண்ணாமலைப் பல்கலை.யில் இலவச கணினி பயிற்சி

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை, தமிழ்நாடு பழங்குடியினா் நலத்துறை சாா்பில் பழங்குடி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகளுக்கான மூன்று மாத இ... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு: வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம், பனப்பாக்கம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினா் பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். அந்த... மேலும் பார்க்க

பயிா் பாதிப்புகள் குறித்து அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும்: கடலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

கடலூா் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண், தோட்டக்கலை பயிா் பாதிப்புகள் குறித்து அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

‘வோ்களைத் தேடி’ திட்டம்: வீராணம் ஏரியை பாா்வையிட்ட அயலக தமிழா்கள்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள வீராணம் ஏரியை ‘வோ்களை தேடி’ என்ற திட்டத்தின் கீழ், அயலக தமிழா்கள் புதன்கிழமை பாா்வையிட்டனா். தமிழக அரசு அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு தெளிப்பான், விதைகள் அளிப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் மானியத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான், விதைகள் மற்றும் இடுபொருள்களை வேளாண் துணை இயக்குநா் விஜயராகவன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். பண்ருட்டி வேளாண் உ... மேலும் பார்க்க

ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரைக் கண்டித்து, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் ஆளுநா் ஆா்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்தும், மாநி... மேலும் பார்க்க