அனைவருமே செத்துவிடுவோம் என நினைத்தேன்: திருப்பதியில் உயிர் பிழைத்தவர் தகவல்
மகரவிளக்கு, பொங்கல்: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சபரிமலை மகரவிளக்கு பூஜை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரம், எா்ணாகுளத்திலிருந்து சென்னைக்கும், பெங்களூரிலிருந்து தூத்துக்குடிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவனந்தபுரத்திலிருந்து ஜன.15-ஆம் தேதி அதிகாலை 4.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06058) இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலிலிருந்து நள்ளிரவு 1 மணிக்கு (ஜன.16) புறப்படும் சிறப்பு ரயில் இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
இந்த ரயில் வா்கலா, கொல்லம், செங்கனூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம், திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் வழியாக இயக்கப்படும்.
எா்ணாகுளத்திலிருந்து ஜன.16-ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06046) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலிலிருந்து ஜன.17-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06047) இரவு 11 மணிக்கு எா்ணாகுளம் சென்றடையும்.
இந்த ரயில் திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் வழியாக இயக்கப்படும்.
தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரிலிருந்து தூத்துக்குடி, சென்னை சென்ட்ரலுக்கு வெள்ளிக்கிழமை (ஜன.10) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
பெங்களூரிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜன.10) இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06569) மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமாா்க்கமாக தூத்துக்குடியிலிருந்து சனிக்கிழமை (ஜன.11) பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06570) பெங்களூரு வழியாக மைசூா் வரை இயக்கப்படும். இதில் 12 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 3 பெட்டிகள், இரு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும்.
பெங்களூரிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜன.10) காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07319) பிற்பகல் 2.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்கல் 3.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07320) இரவு 10.50 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
இந்த ரயில் யஷ்வந்த்பூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, ஜோலாா்பேட்டை, ஆம்பூா், குடியாத்தம், காட்பாடி, சோளிங்கபுரம், அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.