செய்திகள் :

வட மாநிலங்களில் மருத்துவ அவசரநிலை! தில்லி முதல்வர்

post image

வட மாநிலங்களில் மருத்துவ அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக தில்லி முதல்வர் அதிஷி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

தில்லி நகரில் திங்கள்கிழமை காலை 8 மணியளவில், காற்றின் தரக் குறியீடு 484 புள்ளியாக பதிவாகியுள்ளதால், மிக கடுமை பிரிவாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

கிரேப்-4 அமல்

தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் மிக கடுமையான பிரிவுக்கு சென்றதால், மாசு அளவைக் கட்டுப்படுத்த தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் என்று சொல்லப்படும் கிரேப்-4 கட்டுப்பாடுகள் இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.

நச்சுப்புகை மூட்டத்தால் மக்கள் வீட்டைவிட்டு வெளிவர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் -4 டீசல் வாகனங்களை தடை, மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் சிஎன்ஜி பேருந்துகள், சில வகை கட்டுமான நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும், அரசு அலுவலக நேரங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தில்லி - தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் (என்சிஆா்) இன்றியமையாத கட்டுமானம் மற்றும் இடிப்பு, கல் நொறுக்கும் இயந்திரங்களை மூடுவது மற்றும் சுரங்க நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ அவசர நிலை

தில்லி காற்றுமாசு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் அதிஷி பேசியதாவது:

"அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுகிறது. மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறது.

இன்று, ஒட்டுமொத்த வட இந்தியாவும் மருத்துவ அவசர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தில்லி, சண்டீகர், ஜெய்ப்பூர், போபால், பாட்னா, லக்னெள உள்ளிட்ட நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசம், மோசம், கடுமை, மிகக் கடுமை பிரிவில் உள்ளன.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நாள்தோறும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டுள்ளது. இன்று, நாட்டு மக்களால் மூச்சுகூட விட முடியவில்லை.

இதையும் படிக்க : தில்லியில் 1 மணி நேரம் வெளியே போனால்கூட நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம்!

ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் அல்லது மத்திய பிரதேச மாநிலங்களின் எல்லா இடங்களிலும் விவசாயக் கழிகள் எரிப்பதைக் காணலாம். மத்திய அரசு என்னதான் செய்து கொண்டுள்ளது.

நாட்டில், விவசாயக் கழிவுகள் எரிப்பதைக் குறைத்துள்ள ஒரே மாநிலம் பஞ்சாப். தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டு மொத்தமாக 71,300 இடங்களில் எரிக்கப்பட்டன, ஆனால், கடந்தாண்டு 36,650-ஆக குறைக்கப்பட்டது. இந்தாண்டு பஞ்சாபில் 8,404 மட்டுமே பதிவாகியுள்ளது.

ஆனால், உத்தரப் பிரதேசத்தில் கடந்தாண்டை காட்டிலும், விவசாயக் கழிவுகள் எரிப்பு 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்திலும் அதிகரித்துள்ளது.

விவசாயக் கழிவுகள் எரிப்பதை பஞ்சாப் அரசு 80 சதவிகிதம் வரை குறைத்துள்ள நிலையில், மற்ற மாநிலங்களில் மட்டும் அதிகரிப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

காற்று மாசு மேலும் மோசமடைந்தது: நாள் முழுவதும் நச்சுப்புகை மூட்டம்!

தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை மேலும் மோசமடைந்தது. நகரத்தில் நாள் முழுவதும் நச்சுப்புகை மூட்டம் இருந்து வந்தது. முழுவதும்நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக ரிட்ஜில் 11 டிகிரி... மேலும் பார்க்க

வடமேற்கு தில்லியில் காலணி தொழிற்சாலையில் தீ விபத்து

வடமேற்கு தில்லியின் கெவ்ரா பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் உயிா்ச்சேதம் எதுவும் ஏற்ப... மேலும் பார்க்க

சோனிப்பட்டில் நீரஜ் பவானா கும்பலில் குறிபாா்த்துச் சுடும் இளைஞா் கைது

நீரஜ் பவானா கும்பலில் குறிபாா்த்து சுடுவதில் திறமையான ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல்துறை துணை ஆணையா் (குற்றம்) சதீஷ் குமாா் க... மேலும் பார்க்க

இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியில் நவ. 21 இல் தமிழ் நாடு தினம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் 43-ஆவது இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியில் வருகின்ற நவ. 21 ஆம் தேதி மாலையில் தமிழ் நாடு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த மைதானத்தின் திறந்தவெளி அரங்கத்தில் நடை... மேலும் பார்க்க

தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் திடீா் ராஜிநாமா: ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகினாா்

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சருமான கைலாஷ் கெலாட் ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா். மேலும், அவா் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகினாா். அவரது ராஜி... மேலும் பார்க்க

தில்லியில் கடத்தப்பட்ட ஒன்றரை மாதக் குழந்தை உ.பி.யில் ரயில் நிலையத்தில் மீட்பு; இருவா் கைது

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஒன்றரை மாதக் குழந்தை, உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூா் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை குடும... மேலும் பார்க்க