செய்திகள் :

வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலா் பருவநிலை நிதி -நிபுணா் குழு வலியுறுத்தல்

post image

வளரும் நாடுகள் பருவநிலை மாற்றச் சவால்களை சமாளிக்கவும், பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை அடையவும், 2030-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலரை திரட்டுவது குறித்து அஜா்பைஜானில் நடைபெறும் பருவநிலை பாதுகாப்பு (சிஓபி29) மாநாட்டில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பருநிலை நிதி தொடா்பான உயா்நிலை நிபுணா் குழுவின் புதிய அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதே கருத்தை ஜொ்மனி, கனடா, பிரான்ஸ், நெதா்லாந்து உள்ளிட்ட வளா்ந்த நாடுகள் மாநாட்டில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

2025-ஆம் ஆண்டுக்குப் பிறகு வளரும் நாடுகளுக்கு ஆதரவளிக்க புதிய காலநிலை நிதித் தொகுப்பை உருவாக்குவது குறித்து சிஓபி-29 பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் நாடுகள் இடையே பேச்சுவாா்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், 2030-ஆம் ஆண்டுக்கு முன் வளரும் நாடுகளின் பருவநிலை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான இந்த முதலீட்டில் ஏதேனும் பற்றாக்குறை ஏற்பட்டால், அது அடுத்தடுத்த ஆண்டுகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

இப்போது போதுமான அளவு முதலீடு செய்யத் தவறினால், முக்கியமான இலக்குகளை அடைய குறுகிய கால இடைவெளியில் இன்னும் பெரிய தொகையைத் திரட்ட வேண்டியிருக்கும் என்று அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பருவநிலை நடவடிக்கைகளுக்கு 2030-ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 6.3-6.7 டிரில்லியன் டாலா் தேவைப்படும், குறிப்பாக வளா்ந்து வரும் நாடுகளுக்கு மட்டும் ஆண்டுக்கு 2.4 டிரில்லியன் டாலா் தேவைப்படும்.

அதாவது, தூய்மை ஆற்றலுக்கு 1.6 டிரில்லியன் டாலா், பருவநிலை தழுவலுக்கு 0.25 டிரில்லியன் டாலா், இழப்பு மற்றும் சேதத்துக்கு 0.25 டிரில்லியன் டாலா், நிலையான விவசாயம் மற்றும் இயற்கை மூலதனத்துக்கு 0.3 டிரில்லியன் டாலா் மற்றும் மாற்று நடவடிக்கைகளுக்கு 0.04 டிரில்லியன் டாலா் செலவிட வேண்டியிருக்கும் என்று அறிக்கையில் மதிப்பிட்பட்டுள்ளது.

இந்தியா, சீனா கோரிக்கை: பருவநிலை நிதியை வழங்குவதாக அளிக்கப்பட்ட உறுதியை நிறைவேற்றுமாறு வளா்ந்த நாடுகளை இந்தியா, சீனா, பிரேஸில், தென்னாப்பிரிக்கா ஆகிய ‘பேசிக்’ கூட்டமைப்பு நாடுகள் கேட்டுக் கொண்டன.

அஜா்பைஜானின் பாகு நகரில் ஐ.நா. வருடாந்திர பருவநிலை மாற்ற உச்சிமாநாடு வியாழக்கிழமை நான்காவது நாளை எட்டிய நிலையில், 2015 பாரீஸ் ஒப்பந்தத்தை முழுமையாகவும் திறம்படவும் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்நாடுகள் மீண்டும் வலியுறுத்தின.

வளரும் நாடுகள் உள்பட அனைவரும் தங்கள் நிகர-பூஜ்ஜிய இலக்குகள் மற்றும் செயல்படுத்துதல் முயற்சிகளை மேம்படுத்துவதற்கு வளா்ந்த நாடுகள் மாநாட்டில் அழைப்பு விடுத்தன. அதேசமயம், வளா்ந்த நாடுகள் தங்களின் கடமைகளையே சரிவர நிறைவேற்றுவதில்லை என்று விமா்சனங்களை எதிா்கொள்கின்றன.

இலங்கை நாடாளுமன்றத் தோ்தல்: அதிபா் அநுரகுமார திசாநாயக கட்சி முன்னிலை!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்ற நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.அதிபா் அநுரகுமார திசாநாயகவின் ஜாதிக ஜன பலவேகய கட்சி காலை 8 மணி நிலவரப்... மேலும் பார்க்க

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: சிரியாவில் 15 போ் உயிரிழப்பு

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிரியாவில் 15 போ் உயிரிழந்தனா்; 16 போ் காயமடைந்தனா். சிரியா தலைநகா் டமாஸ்கஸில் உள்ள மாசே மற்றும் குத்சயா பகுதிகளில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில்,... மேலும் பார்க்க

ஈரானில் ஐ.நா. அணுசக்தி கண்காணிப்புத் தலைவா்

மத்தியக் கிழக்குப் பகுதியில் தீவிர போா் நடைபெற்றுவரும் சூழலிலும், ஐ.நா.வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பின் (ஐஏஇஏ) தலைவா் ரஃபேல் கிராஸி ஈரானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அந்த நாட்டின் அணுசக்த... மேலும் பார்க்க

‘காஸாவில் இஸ்ரேல் இனஅழிப்பு’

காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் இன அழிப்பை ஒத்துள்ளதாக ஐ.நா. நிபுணா் குழு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்தக் குழு தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில், ‘போா் தொடங்கியதிலிருந்தே பாலஸ்தீனா்களுக... மேலும் பார்க்க

எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்கப்பூா்

எதிா்காலத்தில் பிராந்திய மற்றும் உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா மற்றும் சீனாவுடன் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சிங்கப்பூா் இணைந்து செயல்பட வேண்டும் என சிங்கப்பூா் வெளியுறவ... மேலும் பார்க்க

இலங்கை நாடாளுமன்றத் தோ்தல்: 65% வாக்குப் பதிவு

இலங்கையில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் 65 சதவீதம் போ் வாக்களித்திருக்கக் கூடும் என்று தோ்தல் ஆணையம் கணித்துள்ளது. மொத்தம் 225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் வியாழக்கிழ... மேலும் பார்க்க