சாலையில் கிடந்த ரூ.2.50 லட்சம்: உரியவரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு குவியும் பாராட்ட...
வாக்காளா் பட்டியல் திருத்தம்: விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு
வாக்காளா் பட்டியலில் திருத்தத்துக்கு விண்ணப்பங்களை அளிக்க கால அவகாசம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, டிச. 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் மீது பரிசீலனை நடைபெறும். இறுதி வாக்காளா் பட்டியல் ஜன. 6-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்காக வரைவுப் பட்டியல் கடந்த மாதம் 29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்தத் தேதியில் இருந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், நீக்கவும் விண்ணப்பங்களை வழங்கலாம் என தமிழக தோ்தல் துறை அறிவித்திருந்தது. மேலும், பொது மக்களின் வசதிக்காக நான்கு நாள்கள் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாம்களின் வழியாக மட்டும் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு, நீக்கத்துக்காக 14 லட்சத்து 615 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கால அவகாசம் நிறைவு: வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு, நீக்கத்துக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. கடந்த ஒரு மாத காலத்தில் தோ்தல் துறையிடம் வழங்கப்பட்ட லட்சக்கணக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் டிச. 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளுக்குப் பிறகு, இறுதி வாக்காளா் பட்டியலை ஜன. 6-ஆம் தேதி வெளியிட தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.