செய்திகள் :

வாக்குத் திருட்டு நடைபெறும் வரை வேலையின்மை, ஊழல் தொடர்ந்து அதிகரிக்கும்: ராகுல்

post image

இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை வேலையின்மை, அது வாக்குத் திருட்டுடன் நேரடி தொடர்புடையது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

இதுதொடர்பாக ராகுலின் எக்ஸ் பதிவில்,

இந்தியாவில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை வேலையின்மை, அது வாக்குத் திருட்டுடன் நேரடியாகத் தொடர்புடையது.

ஒரு அரசு பொதுமக்களின் நம்பிக்கையை வென்று ஆட்சிக்கு வரும்போது அதன் முதல் கடமை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாய்ப்புகளை வழங்குவதாகும். ஆனால், பாஜக தேர்தல்களில் நேர்மையாக வெற்றி பெறுவதில்லை. அவர்கள் வாக்குகளைத் திருடி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஆட்சியைத் தக்கவைக்கின்றனர்.

அதனால்தான் வேலையின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்புகள் குறைந்ததோடு, ஆள்சேர்ப்பு செயல்முறைகள் சரிந்துவிட்டன. இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.

நாட்டின் இளைஞர்கள் கடினமாக உழைக்கிறார்கள், கனவு காண்கிறார்கள், தங்கள் எதிர்காலத்திற்காகப் போராடுகிறார்கள். ஆனால் (பிரதமர் நரேந்திர மோடி) பிரபலங்கள் அவரைப் புகழ்ந்து பாட வைப்பதும், கோடீஸ்வரர்கள் லாபம் அடைய செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.

இளைஞர்களின் நம்பிக்கைகளை உடைத்து அவர்களை விரக்தியடையச் செய்வது அரசின் அடையாளமாக மாறிவிட்டது. ஆனால் இப்போது, ​​நிலைமை மாறி வருகிறது.

உண்மையான போராட்டம் வேலைகளுக்கு மட்டுமல்ல, வாக்குத் திருட்டுக்கு எதிரானது என்பதை இந்தியாவின் இளைஞர்கள் புரிந்துகொள்கிறார்கள். ஏனெனில் வாக்குகள் திருடப்படும் வரை, வேலையின்மை, ஊழல் தொடர்ந்து உயரும்.

நாட்டின் உச்ச தேசபக்தி என்பது இந்தியாவை வேலையின்மை, வாக்குத் திருட்டிலிருந்து விடுவிப்பதில் உள்ளது என்று அவர் கூறினார்.

இதோடு விடியோ ஒன்றையும் ராகுல் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு பாதியில் வேலை கேட்டுப் போராடும் மாணவர்களை போலீஸார் தடியடி நடத்துவதும், மறுபாதியில் பிரதமர் மோடி மரக்கன்றுகளை நட்டு, மயில்களுக்கு உணவளித்து, யோகா பயிற்சி செய்வது போன்ற தொகுப்பையும் ராகுல் பகிர்ந்துள்ளார்.

Congress leader Rahul Gandhi on Tuesday claimed that as long as elections are "stolen", unemployment and corruption will continue to rise, and asserted that young people will no longer tolerate "job theft" and "vote theft".

இதையும் படிக்க: ரிஷப் பந்த்தை துரத்தும் காயம்..! மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்டில் விளையாடுவாரா?!

விப்ரோ நிறுவனரிடம் உதவிக் கோரும் கர்நாடக முதல்வர்!

பெங்களூரில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த உதவிக் கோரி, விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜிக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். பெங்களூரின் வெளிவட்டச் சாலையில் நிலவும் ... மேலும் பார்க்க

ராகுலின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டும்; பாஜகவினர் அல்ல! சரத் பவார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டுமே தவிர, பாஜகவினர் அல்ல என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார் தெரிவித்துள்ளார்... மேலும் பார்க்க

சமூகங்களுக்கிடையே வேறுபாடுகளைக் களைய முதல்வர் முன்வர வேண்டும்: சரத் பவார்!

மகாராஷ்டிரத்தில் நடைபெறும் இடஒதுக்கீடு மோதலுக்கு மத்தியில், பல்வேறு சமூகங்களுக்கிடையேயான பிரச்னையைத் தீர்ப்பதில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னிலை வகிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ச... மேலும் பார்க்க

வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா! மின்சாரம் பாய்ந்து 7 பேர் பலி!

கொல்கத்தாவில் திங்கள்கிழமை இரவுமுதல் விடியவிடிய பெய்த கனமழை காரணமாக மாநகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தா... மேலும் பார்க்க

சீனா சென்ற மார்க்சிஸ்ட் கட்சிக் குழு!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பை ஏற்று, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் சீனா சென்றுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பன்னாட்டுத் துறையின் அழைப்பை ஏற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்... மேலும் பார்க்க

பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு நினைவிடம்! - அசாம் அரசு அறிவிப்பு

மறைந்த அசாமிய பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு, அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்க அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.அசாமி, ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராகவும், இந்த... மேலும் பார்க்க