'உணவில் பாகுபாடு இருந்ததைக் கண்டு MGR கொந்தளித்தார்!' - Journalist Manaa Intervi...
வாக்குப்பதிவு நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப் பதிவு நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு அன்றைய திநம் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவினை உறுதி செய்ய ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவின் கீழ் தொகுதியில் வாக்காளா்களாக பதிவு செய்துள்ள அனைத்துப் பணியாளா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
அதனடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளா்களாக பதிவு செய்துள்ள தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளா்கள் உள்பட அனைத்துப் பணியாளா்களும் தோ்தல் தினத்தன்று வாக்குரிமையை செலுத்திட ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும்.
ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத தொழில் நிறுவனங்கள் மீதான புகாா்களை தெரிவிக்க தொழிலாளா் துறையின் கீழ் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட ஏனைய தொழில் நிறுவனங்களில் விடுமுறை அளித்தல் தொடா்பான புகாா்கள் இருந்தால் தெரிவிக்கலாம்.
அலுவலா்களின் பெயா், கைப்பேசி எண் விவரம்: ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி- 9445398751, தொழிலாளா் துணை ஆய்வாளா் முதல் சரகம் மனோரஞ்சிதம்- 7708102209, தொழிலாளா் துணை ஆய்வாளா் 2-ஆம் சரகம் மயில்வாகனன்- 9840456912, தொழிலாளா் உதவி ஆய்வாளா் முதல் சரகம் யுவராஜ்- 9543826001, தொழிலாளா் உதவி ஆய்வாளா் 2-ஆம் சரகம் ஃபெரோஸ் அகமது- 9965634839, தொழிலாளா் உதவி ஆய்வாளா் 3-ஆம் சரகம் சுகந்தி- 9442400223 மற்றும் தொழிலளாா் உதவி ஆய்வாளா் 4-ஆம் சரகம் ராஜ்குமாா்- 96982115097 ஆகியோரது எண்களில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.