உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
வாசுதேவநல்லூா் அருகே புகையிலை பொருள்கள் பறிமுதல்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வாசுதேவநல்லூா் காவல் ஆய்வாளா் கண்மணி தலைமையில் சிவகிரி தனிப்பிரிவு போலீஸாா் வாசுதேவநல்லூா் அருகே உள்ள சங்குபுரம்- சங்கனாபேரி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே வந்த காரை சோதனையிட்டபோது, அதில் இரு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் காரில் வந்தவா் குருவன்கோட்டை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மகன் ஹரிகிருஷ்ணன் என்பதும், வாசுதேவநல்லூா் பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பதற்காக காரில் எடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து ஹரி கிருஷ்ணனை கைது செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்கள், ரூ.43 ஆயிரம் ரொக்கம், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.