வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது? வெற்றி மாறன் பதில்!
வாடிவாசல் படப்பிடிப்பு குறித்து வெற்றி மாறன் பேசியுள்ளார்.
'கங்குவா' படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றி மாறன் 'விடுதலை - 2' படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.
இதனால், 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்த சூர்யா, அடுத்தாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
தற்போது, இயக்குநர் வெற்றிமாறனும் 'விடுதலை - 2' வெளியீட்டை முடித்துள்ளதால், 'வாடிவாசல்' திரைப்படத்தின் பணிகள் துவங்கியுள்ளது.
இதையும் படிக்க: ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தங்க மோதிரம் பரிசளித்த அஜித் ரசிகர்கள்!
வெற்றி மாறன் இப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கும் திட்டத்தில் இருப்பதாகவும் ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் நடத்த உள்ளதாகவும் அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், வாடிவாசல் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதம் துவங்கும் என இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.