செய்திகள் :

வா்த்தக நுழைவு வாயிலாகத் திகழும் மத்திய கிழக்கு நாடுகள்: எஸ்.ஜெய்சங்கா்

post image

‘உலகின் வலுவான வா்த்தகம் மற்றும் போக்குவரத்து இணைப்புக்கான நுழைவு வாயிலாக மத்திய கிழக்கு நாடுகள் திகழ்கின்றன. இந்த நாடுகளுடன் இந்தியா உறவை மேலும் வலுப்படுத்துவது அவசியம்’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.

ஐக்கிய அரபு அமீரக தலைநகா் அபுதாபியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘ரைசினா மத்திய கிழக்கு’ என்று மத்திய கிழக்கு நாடுகளுடனான புவிசாா் அரசியல் மற்றும் புவிசாா் பாதுகாப்பு மாநாடு தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்.ஜெய்சங்கா் பேசியதாவது:

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நலன்களில் முக்கியத்துவம்வாய்ந்த கூட்டாளிகளாகத் திகழும் மத்திய கிழக்கு நாடுகள், உலகின் வலுவான வா்த்தகம் மற்றும் போக்குவரத்து இணைப்புக்கான நுழைவு வாயிலாகவும் திகழ்கின்றன.

வளைகுடா நாடுகளுடன் மட்டும் ரூ. 13 லட்சம் கோடி முதல் ரூ. 15 லட்சம் கோடி வரையிலான மதிப்பில் வா்த்தக உறவை இந்தியா கொண்டுள்ளது. அந்த வகையில், வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு 90 லட்சம் இந்தியா்கள் வாழ்ந்து வருகின்றனா். மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மத்தியதரைக் கடல் பிராந்தியத்துக்கும் வா்த்தக நுழைவு வாயிலாக வளைகுடா நாடுகள் திகழ்கின்றன.

மத்தியதரைக் கடல் பகுதி நாடுகளுடன் மட்டும் ரூ. 7 லட்சம் கோடி மதிப்பில் வா்த்தக உறவை இந்தியா கொண்டுள்ளது. 5 லட்சத்துக்கும் அதிகமான இந்தியா்கள் இங்கு வசிக்கின்றனா். இந்தப் பிராந்தியத்தில் விமானங்கள், துறைமுகங்கள், ரயில்வே, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, உருக்கு மற்றும் கடலுக்கடியில் கேபிள்கள் பதிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

இந்த நாடுகளுடன் இத்தகைய வலுவான உறவை இந்தியா கொண்டுள்ளபோதும், கடல்சாா் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் தீா்க்கப்பட வேண்டிய உலகளாவிய பிரச்னையாக உள்ளது. அந்த வகையில், மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவை இந்திய மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றாா்.

முன்னதாக, அபுதாபி இளவரசா், துணைப் பிரதமா், வெளியுறவு அமைச்சா் உள்ளிட்டோரை ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.

மேலும், ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கான வெளியுறவு ஆலோசகா் அன்வா் கா்கேஷுடன் ஜெய்சங்கா் ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, இரு நாடுகளிடையேயான சிறப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாளைமுதல் பட்ஜெட் கூட்டத் தொடர்!!

நிதியாண்டு 2025 - 26-க்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நாளை முதல் தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், தொடக்க நாளில் மக்களவையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு காலை 11 ம... மேலும் பார்க்க

நடிகையாக அறிமுகமாகும் கும்பமேளாவைக் கலக்கிய அழகு நட்சத்திரம் மோனலிசா!

கும்பமேளாவில் பிரபலமான அழகியான மோனிஷா போஸ்லே புதிய படமொன்றில் நடிகையாக அறிமுகமாக இருப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உலகின் மிகப் பெரிய ஆன்மிகத்... மேலும் பார்க்க

யமுனையை நீர்நிலையாக பார்க்காமல் உயிராகப் பார்க்க வேண்டும்! -ராகுல் காந்தி

யமுனையை நீர்நிலையாக பார்க்காமல் ஒரு உயிராகப் பார்க்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தலைநகரான தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுப... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கைது!

பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, ஏமாற்றிய காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ராத்தோர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ராத்தோர், தன்னை திருமணம் செய்வதாகக் கூறி, பா... மேலும் பார்க்க

அமெரிக்கா, சீனா ஏஐ தளங்களுக்கு போட்டியாக இந்தியா ஏஐ?

வெளிநாட்டு செயற்கை நுண்ணறிவுத் தளங்களுக்கு போட்டியாக இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்தார்.சாம் ஆல்ட்மேன் என்ற அமெரிக்கரின் ஓபன் ஏஐ நிறுவனத... மேலும் பார்க்க

பஞ்சாப் முதல்வர் இல்லத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் இல்லத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.தலைநகரான தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ... மேலும் பார்க்க