செய்திகள் :

விஜய்க்கு வந்ததை விட ரஜினி, அஜித்தை பார்க்க கூட்டம் வரும்: கே.டி.ராஜேந்திர பாலாஜி

post image

விஜய்க்கு வந்ததை விட ரஜினி, அஜித்தை பார்க்க கூட்டம் வரும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சிவகாசியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும். விஜய் தனித்து நின்று போட்டியிட்டால் தமிழக வெற்றிக்கழகத்தை திமுக அழித்து விடும். விஜய் பாஸ் மார்க் வாங்க வேண்டுமானால் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்.

எம்ஜிஆருக்கு பிறகு திரையுலகில் இருந்து வந்தவர்களில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் விஜயகாந்த். தேமுதிக ஆரம்பித்தபோது மதுரையில் அவருக்கு கூடிய கூட்டம் அளப்பரியது. விஜயகாந்துக்கு பக்குவபட்ட தொண்டர்கள் இருந்தார்கள். ஆனால் விஜய்க்கு அதுபோன்ற தொண்டர்கள் இல்லை. விஜய்க்கு கூட்டம் வருவது உண்மைதான்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாது. அஜித் வந்தால் இரண்டு மடங்கு கூட்டம் அதைவிட அதிகமாக வரும். ரஜினிக்கு கூடாத கூட்டம் இல்லை. அவருக்கு இன்றைக்கும் கூட்டம் வரும். விஜய் தனித்து நின்று எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது. அவருடைய முயற்சியெல்லாம் வீணாகத்தான் செல்லும்.

தேர்தலில் திமுக, தவெகவிற்கு மட்டுமே போட்டி என விஜய் கூறுவது உண்மைதான். ஆனால் முதலிவடத்திற்கு அல்ல இரண்டாவது இடத்திற்கு. ஸ்டாலினுக்கு மாற்றாக 2026 எடப்பாடி பழனிசாமியைத்தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றார்.

Former minister K.T. Rajenthra Bhalaji has said that more people will come to see Rajinikanth and Ajith than they did for Vijay.

திமுக எதிர்ப்பை விஜய் தீவிரப்படுத்த வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

திமுக எதிர்ப்பை விஜய் தீவிரப்படுத்த வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், நம்முடைய பைகள் நிரம்பப்... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளி... மேலும் பார்க்க

செப்.23இல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

வரும் 23ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. ம... மேலும் பார்க்க

தவெகவுக்கான மக்கள் ஆதரவு கண்டு பிறருக்கு அச்சம்: விஜய்

வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன் என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (13.09.2025) தொ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டையே முக்காடு போட வைப்பார்: இபிஎஸ் மீது பொன்முடி விமர்சனம்

அதிமுக 5 கட்சிகளாகப் பிரிந்து போயிருப்பதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசுகையில், ``தமிழ்நாட்டைத் தலைகுனிய வைப்பத... மேலும் பார்க்க