Nadigar Sangam: ``வருமானங்களே கடனை அடைக்க வழியை அமைத்துக்கொடுக்கும்" - கார்த்தி ...
Ind vs Pak: மீண்டும் நேருக்கு நேர் மோதும் இந்தியா, பாகிஸ்தான்; SKY & Co கைகுலுக்குமா, அவமதிக்குமா?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைத் தொடர் சூப்பர் 4 சுற்றை எட்டியிருக்கிறது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தச் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன.

சூப்பர் 4 சுற்றில் நேற்று (செப்டம்பர் 20) நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது வங்கதேசம்.
இன்று (செப்டம்பர் 20) இரண்டாவது போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவிருக்கின்றன.
சாதாரணமாகவே இந்தியா vs பாகிஸ்தான் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய போட்டியாக மாற்றிவைக்கப்பட்டிருக்கும் சூழலில், லீக் சுற்றில் பாகிஸ்தானுடனான போட்டியில் இந்திய வீரர்கள் செய்த செயல் இன்றைய போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.
அதாவது, லீக் சுற்றில் நடைபெற்ற போட்டியில் டாஸின்போது இரு அணியின் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. அதேபோல், போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற போது களத்தில் இருந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்காமல், மறுமுனையில் இருந்த ஷிவம் துபேவை அழைத்துக்கொண்டு நேராக பெவிலியனுக்குச் சென்றார்.

போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில், பாஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நாங்கள் நிற்கிறோம் என்று கைகுலுக்காமல் போனதற்குக் காரணம் தெரிவித்தார்.
இவர் மட்டுமல்லாது பிசிசிஐ அதிகாரியொருவர், "எதிரணி வீரர்களிடம் கைகுலுக்க வேண்டுமென எந்தச் சட்டமும் இல்லை" எனவும், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சாய்கியா, "விரோத நாட்டின் கூச்சல்களுக்குக் கவனம் செலுத்த வேண்டாம்" எனவும் ஆணவத் தொனியில் கருத்து தெரிவித்தனர்.
எனவே, இன்றைய போட்டியில் யார் வெற்றிபெறப்போகிறார்கள் என்பதை விட யார் வெற்றி பெற்றாலும் இரு அணி வீரர்களுக்கும் கைகுலுக்கிக் கொள்வார்களாக என்பதுதான் இருநாட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.