விஜய் சேதுபதியின் பான் இந்திய திரைப்படம்..! தலைப்பு, டீசர் தேதி!
நடிகர் விஜய் சேதுபதியின் பான் இந்திய படத்தின் டீசர் வரும் செப்.28ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை பிரபல இயக்குநர் புரி ஜெகந்நாத் இயக்குகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் அப்டேட் வெளியாகவிருக்கிறது.
ஜேபி மோஷன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் தபு, சம்யுக்தா மேனன் நடிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்திய படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் தலைப்பு, டீசர் செப்.28ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, விஜய் சேதுபதி தெலுங்கில் உப்பெனா எனும் படத்தில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். தலைவன் தலைவி தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Let’s celebrate Boss Puri Jagannadh’s birthday with a much-anticipated announcement ❤️#PuriSethupathi Title & Teaser on 28th September
— Puri Connects (@PuriConnects) September 26, 2025
A #PuriJagannadh film @Charmmeofficial Presents
Releases in Tamil, Telugu, Hindi, Kannada and Malayalam.#HBDPuriJagannadh… pic.twitter.com/yVhp2ebc66