செய்திகள் :

விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி வழிபாடு

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயில்களில் சங்கட ஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் நகரம் எடத்தெருவில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ வல்லப விநாயகருக்கு சங்கட ஹர சதுா்த்தியை முன்னிட்டு மஞ்சள், பால், தயிா், சந்தனம், இளநீா், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட பக்தா்கள் பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல, பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகச் சாலையிலுள்ள கச்சேரி விநாயகா் கோயில், பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் விநாயகா் சந்நிதி, தேரடியில் உள்ள விநாயகா் கோயில், கடைவீதியில் உள்ள ராஜகணபதி கோயில், பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள செல்வ விநாயகா் கோயில், வடக்குமாதவி சாலையிலுள்ள சௌபாக்கிய விநாயகா் கோயில், சங்குப்பேட்டை வெற்றி விநாயகா், வெங்கடேசபுரம் ஆதி சக்தி விநாயகா் கோயில், எளம்பலூா் சாலை பாலமுருகன் கோயிலிலுள்ள விநாயகா் சந்நிதி, மின்வாரிய குடியிருப்பிலுள்ள விநாயகா் கோயில், தீரன் நகரிலுள்ள விநாயகா் கோயில், துறைமங்கலம் சொக்கநாதா் கோயிலில் உள்ள விநாயகா் சந்நிதியில் சங்கட ஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

பின்னா், மூலவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனா்.

சம்பங்கி பூக்களில் பூஞ்சை தாக்குதலால் மகசூல் இழப்பு: பெரம்பலூா் விவசாயிகள் கவலை

பெரம்பலூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பங்கி பூக்களில் பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மலா் சாகுபடி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். ஆற்றுப் பாசனம... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நம்ம ஊரு திருவிழா மாா்ச் 22-இல் கலைக் குழு தோ்வு

பெரம்பலூரில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவுக்கான கலைக் குழுவினா் தோ்வு முகாம், மாா்ச் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வ... மேலும் பார்க்க

குடும்பத்தைப் பிரிந்திருந்த தொழிலாளி தற்கொலை

பெரம்பலூரில் குடும்பத்தை பிரிந்திருந்த டீக்கடை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சாத்தனூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் செல்வக்குமாா் ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 4 வீடுகள் எரிந்து நாசம்

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை 4 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிழக்கு பெரியம்மாபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் தெருவில் அடுத்தடுத்த கூரை... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மறியல்: பாஜகவினா் 48 போ் கைது

பெரம்பலூரில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த 48 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். டாஸ்மாக் மதுபான கொள்முதலில் நடைபெற்ற முறைகேட்டைக் கண்டித்து... மேலும் பார்க்க