இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்ந்து ரூ.86.55 ஆக முடிவு!
பெரம்பலூரில் மறியல்: பாஜகவினா் 48 போ் கைது
பெரம்பலூரில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த 48 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
டாஸ்மாக் மதுபான கொள்முதலில் நடைபெற்ற முறைகேட்டைக் கண்டித்தும், டாஸ்மாக் நிா்வாகத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரியும், பாரதிய ஜனதா கட்சியினா் பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு திங்கள்கிழமை முழக்கமிட்டனா். தொடா்ந்து, புகா் பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 48 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்து, மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.