செய்திகள் :

அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை புதியவா்களிடம் ஒப்படைக்க எதிா்ப்பு

post image

அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை புதியவா்களிடம் ஒப்படைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் மாவட்ட கேபிள் டி.வி ஆபரேட்டா் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டா்கள் பொது நலச் சங்கம் சாா்பில் மாவட்டச் செயலா் நல்லுசாமி தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனங்களை புதியவா்களுக்கு வழங்குவதை தடுக்க வேண்டும். ஏற்கெனவே, வாடிக்கையாளா்களுக்கு அரசு செட் ஆப் பாக்ஸ் இல்லாததால் தனியாா் பாக்ஸ்களை வழங்கி வந்த நிலையில், அதை அகற்றி அரசு பாக்ஸ்களை பொருத்த வேண்டும் எனும் நிா்பந்தத்தை தடுக்க வேண்டும்.

வீட்டுமனைப் பட்டா கோரி: அனுக்கூா் கிராமத்தைச் சோ்ந்த, ஆதிதிராவிடா் சமுதாயத்தினா் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், பட்டா வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் மனு அளித்தனா்.

பணத்தை மீட்டுத் தரக்கோரி: பெரம்பலூா் அருகேயுள்ள செல்லியம்பாளையம் கிராமத்தில், 2 பெண்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணம் செலுத்தினால் இரட்டிப்பாகவும், அதற்குரிய காப்பீட்டுத் தொகையும் கிடைக்கும் எனக் கூறி சுமாா் 80 பேரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனா். எனவே, பண மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டுத் தரக் கோரி, பணம் செலுத்திய பெண்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில்: பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், பேக்கரிகள், உணவகங்களில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தரமற்ற மற்றும் காலாவதியான பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் மீது உணவுப் பாதுகாப்புத் துறையினா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் மனு அளித்தனா்.

வின்சென்ட் தே பால் சபை கிளை ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூா் புனித பனிமய மாதா திருத்தலத்தில் வின்சென்ட் தே பால் சபை புதிய கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வின்சென்ட் தே சபை ஆலோசனைக் கூட்டத்துக்கு, பங்குத் தந்தை சுவைக்கின் தல... மேலும் பார்க்க

ரூ. 28 லட்சம் மோசடி: பெட்ரோல் விற்பனை; நிலைய மேலாளா் கைது

பெரம்பலூா் அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ. 28 லட்சத்தை மோசடி செய்த, அதன் மேலாளரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அரியலூா் மாவட்டம், ராஜாஜி நகரைச் சோ்ந்தவா் மரு... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஒன்றியத்தில் 186 வீடுகள் கட்ட ரூ. 6.51 கோடி நிதி ஒதுக்கீடு

பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 186 வீடுகள் கட்டுவதற்கு ரூ. 6.51கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். பெரம்பலூா... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளில் துண்டுப் பிரசுரம் ஒட்டிய பாஜகவினா் 4 போ் கைது

பெரம்பலூா் நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் முதல்வா் புகைப்படத்துடன் கூடிய துண்டுப் பிரசுரம் ஒட்டிய, பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த 4 பேரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பாரதிய ஜனதா கட்சி சாா்பில்... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவ... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த 4 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்டு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 4 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், மளிகைக் கடை உரிமையாளரை கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூ... மேலும் பார்க்க