செய்திகள் :

நீதிபதி வர்மா வீட்டில் பணம் இருந்ததா? தில்லி தீயணைப்புத் துறை விளக்கம்

post image

புது தில்லி : தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டிலிருந்து தீயணைப்புத்துறையினரால் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை என்று தில்லி தீயணைப்புத்துறை விளக்கமளித்துள்ளது.

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இந்த நிலையில், தில்லியிலுள்ள அவரது வீட்டில் கடந்த 14-ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தின்போது, அந்த வீட்டிலுள்ல ஓர் அறையிலிருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்டதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இதனைத்தொடர்ந்து, தில்லியிலிருந்து நீதிபதி வர்மா அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், இந்த விவகாரத்தில் விரிவான நீதி விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் சம்மதித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நீதிபதியின் வீட்டிலிருந்து பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை நாஙக்ள் பணத்தை பார்க்கவும் இல்லை என்று தில்லி தீயணைப்புத்துறை விளக்கமளித்துள்ளது.

தில்லி தீயணைப்புத்துறை தலைமை அதிகாரி அதுல் கார்க் இன்று(மார்ச் 21) செய்தியாளர்களுடன் பேசியதாவது: “தில்லியிலுள்ள நீதிபதி வர்மா லட்டியென்சின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக கடந்த மார்ச் 14 இரவு 11.35 மணிளவில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. அங்கே குடோனில் தீ பரவியதைத் தொடர்ந்து, வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திலிருந்து பணத்தையோ அல்லது விலையுயர்ந்த பொருள்களையோ கைப்பற்றவில்லை; பார்க்கவுமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம்: திரிணமூல் காங். புறக்கணிப்பு?

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைகள் குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் நாளை(மார்ச் 22) முதல்வர் மு.க.... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: இதுவரை 105 பேர் கைது, 3 புதிய வழக்குகள் பதிவு!

நாக்பூர் வன்முறை சம்பவத்தில் இதுவரை 105 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என ஹிந்து அமைப்... மேலும் பார்க்க

குற்றவியல் வழக்குகள் கோடிக்கணக்கில் நிலுவை: மத்திய அமைச்சகம் தகவல்

நாட்டில் கோடிக்கணக்கான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தில் மட்டும் 17,647 குற்றவியல் வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 18.3 ... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்க மொழிப் பிரச்னை விஸ்வரூபமாக்கப்பட்டுள்ளது: அமித் ஷா

புது தில்லி: எதிர்க்கட்சிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கவே மொழிப் பிரச்னை விஸ்வரூபமாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.தேசிய கல்விக் கொள்கை மற்றும் அதைச் சார்ந்த மும்மொழ... மேலும் பார்க்க

திருப்பதியில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

திருமலை திருப்பதி கோயிலில் ஹிந்து மதத்தினர் மட்டுமே பணியமர்த்தப்படுவர் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது பேரன் பிறந்தநாளையொட்டி, திரு... மேலும் பார்க்க

2019-க்குப் பின் இந்தியாவில் இனக் கலவரம் 94% அதிகரிப்பு! -பாஜக அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புது தில்லி : பாஜக அரசு பதவியேற்றதும் நாட்டில் இனக் கலவரம் 94 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். ஆம்... மேலும் பார்க்க