செய்திகள் :

எதிர்க்கட்சிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்க மொழிப் பிரச்னை விஸ்வரூபமாக்கப்பட்டுள்ளது: அமித் ஷா

post image

புது தில்லி: எதிர்க்கட்சிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கவே மொழிப் பிரச்னை விஸ்வரூபமாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை மற்றும் அதைச் சார்ந்த மும்மொழிப் பிரச்னை குறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(மார்ச் 21) பேசியதாவது:

“ஒரு சிலர், ஒரு சில கட்சிகள், தங்கள் சொந்த அரசியல் ஆதாயத்துக்காக மொழிப் பிரச்னையை எழுப்புகின்றனர். இதன்மூலம், அரசியல் ரீதியாக ஆதாயம் தேடிக்கொள்வது மட்டுமல்லாது, தம் மீதான ஊழல் குற்றங்களை அவர்கள் மறைக்க முயற்சிக்கின்றனர்.

தாம் செய்துள்ள ஊழலை மூடி மறைப்பதற்காக மொழிப் பிரச்னையை எழுப்பி, அதன்பின் குளிர்காய்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை இது. நாட்டில் மொழியின் பெயரால் போதும்போதும் என்கிற அளவுக்கு ஏகப்பட்ட பிரிவினைகள் ஏற்கெனவே நிலவுகின்றன. எனவே, இனிமேலும், இது போல நிகழக்கூடாது.

ஹிந்தி பிற மொழிகளுக்கு தோழமை மொழியே; இந்தியாவிலுள்ள எந்தவொரு மொழிக்கும் போட்டியல்ல.

மோடி அரசு, இந்திய மொழிகளுக்கான துறையை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், அனைத்து இந்திய மொழிகளையும் பரப்ப நடவடடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, அஸ்ஸாமி இப்படி ஒவ்வொரு மொழியையும் இணைத்து நடவடடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.

நதிநீா் இணைப்பு: மாநிலங்களிடையே கருத்தொற்றுமை உருவாக்க முயற்சி: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

‘நதிநீா் இணைப்பு திட்டங்கள் தொடா்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவ... மேலும் பார்க்க

நாட்டில் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்களைக் கடந்தது!

நாட்டில் நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவில் 1 பில்லியன் (100 கோடி) டன்களைக் கடந்துள்ளது. இது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரிய தருணம் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ‘நாட்டின் எல்லைப் பக... மேலும் பார்க்க

தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் பரிசோதனை: எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

‘அவரவா் தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முழுமையான உடல்நல மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் மத்திய அரசு வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டத... மேலும் பார்க்க

கேள்வி நேரத்துக்கு பதிலாக விவாதம்: மாநிலங்களவையில் திரிணமூல் வெளிநடப்பு

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் மற்றும் தனிநபா் மசோதாக்கள் மீதான அலுவல்களுக்கு பதிலாக உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திரிணமூல் காங்கிர... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது: அமித் ஷா உறுதி

‘பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது’ என்று குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘நக்ஸல் தீவிரவாதம் வரும் 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் முழுமையாக ஒழிக்கப்படும்’ என்று ... மேலும் பார்க்க