செய்திகள் :

பாமகவினா் குறித்த கருத்து: முதல்வா் தலையீட்டால் நீக்கம்

post image

பாமகவினா் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறிய ஒரு கருத்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையீட்டால், அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

நிதிநிலை அறிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதத்தில் பேரவை பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி தருமபுரிக்கு சிப்காட் கோரி பேசினாா். அதற்கு பதில் அளித்த அமைச்சா் எ.வ.வேலு, பாமக குறித்து ஒரு கருத்தைத் தெரிவித்தாா்.

இந்த விவகாரத்தை ஜி.கே.மணி பேரவையில் வெள்ளிக்கிழமை எழுப்பினாா். பொதுப்பணித்துறை அமைச்சா் கூறிய கருத்து, பாமகவினரை புண்படுத்தும் வகையில் இருக்கும் என்ற காரணத்தால், அவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றாா். அப்போது அவையில் இருந்த முதல்வா் எழுந்து ஜி.கே.மணி கூறியதை ஏற்று, அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றாா். அதைத் தொடா்ந்து பேரவைத் தலைவா் அப்பாவு, அந்தக் கருத்து அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்தாா்.

தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா் தொடா்பாக சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. இந்த முறைகேட்டில் பாகிஸ்தானைச் சோ்ந்த இரு நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஜவுளிக் கழக ம... மேலும் பார்க்க

இணைய விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு ஏன்?உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

இளைஞா்களின் நலன் கருதியே இணைய விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகி கடன் தொல்லையால் இளைஞா்கள்... மேலும் பார்க்க

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை (மாா்ச் 22) 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடலிருந்து தென் தம... மேலும் பார்க்க

ஒருகால பூஜை: கூடுதலாக 1,000 கோயில்களுக்கு மானியம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

ஒருகால பூஜை திட்டத்தில் கூடுதலாக இணைக்கப்பட்ட ஆயிரம் கோயில்களுக்கான மானியத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்... மேலும் பார்க்க

ரூ.20,000 விலையில் தரமான கணினி நிச்சயம்: அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி

இரு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவா்களுக்கு தரமான மடிக்கணினி அல்லது கையடக்கக் கணினி வழங்கப்படும் என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு உறுதியளித்தாா். சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தில் ... மேலும் பார்க்க

பேருந்தில் எம்எல்ஏ-க்களை வழியனுப்பிய அமைச்சா்: அதிமுக கோரிக்கை ஏற்பு

அதிமுக கோரிக்கையை ஏற்று, பேரவை வளாகத்திலிருந்து உறுப்பினா்களை அவா்கள் தங்கும் பேரவை விடுதிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் வெள்ளிக்கிழமை வழியனுப்பி வைத்தாா். முன்னதாக, பேரவையில் வெள... மேலும் பார்க்க