செய்திகள் :

திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: முதல்வர் சந்திரபாபு நாயுடு

post image

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ள ஆந்திரம் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் தற்போது கோயிலில் பணிபுரிந்தால், அவர்களது உணர்வுகள் புண்படுத்தப்படாமல் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும், மத நிறுவனங்களில் அந்தந்த மதங்களைப் பின்பற்றுபவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வா் சந்திரபாபு நாயுடு, பேரன் நாரா தேவான்ஷின் 11-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மனைவி புவனேஸ்வரி, மகன் மற்றும் அமைச்சா் லோகேஷ், மருமகள் பிரம்மினி, பேரன் தேவான்ஸ் உள்ளிட்டோருடன் கோயிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தார்.

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்குப் பின்னா், திருமலையில் அன்ன பிரசாதம் ஒரு நாளுக்கு செலவிடப்படும் ரூ.44 லட்சத்தை நன்கொடையாக அளித்தனா்.

தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத பவனுக்கு தனது குடும்ப உறுப்பினா்களுடன் சென்ற முதல்வர் பக்தா்களுக்கு அன்ன பிரசாதத்தை தங்கள் கைகளால் வழங்கினா்.

அப்போது அவா், பக்தா்களிடம் தேவஸ்தானம் வழங்கும் வசதிகள் குறித்து கருத்துகளைக் கேட்டறிந்தார். பின்னா், முதல்வா் மற்றும் குடும்பத்தினா் பக்தா்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனா்.

தொடா்ந்து, திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினா் மாளிகையில் முதல்வா் சந்திரபாபு நாயுடு செய்தியாளா்களிடம் பேசுகையில்,

நாரா தேவான்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் திருமலையில் பக்தர்களுக்கு உணவு பரிமாறுவதை நாங்கள் ஒரு பாரம்பரியமாக மாற்றியுள்ளோம்.

அன்னதானத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வா் என்.டி.ராமாராவ் தொடங்கி வைத்தார், இது என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு புனிதமான திட்டமாகும். பின்னர் சுகாதார உதவியை வழங்குவதற்காக தெலுங்கு தேசம் கட்சியால் பிராண தானம் (உயிர் தானம்)திட்டத்தைத் தொடங்கியுள்ளேன், மேலும் இந்த இரண்டு முயற்சிகளும் இறைவன் மற்றும் மனிதகுலம் இரண்டிற்கும் சேவை செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டவை," என்று நாயுடு கூறினார்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: 7 மாநில கட்சிகளின் தலைவா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

மூன்றாவது திட்டமாக, மாநிலத்தில் உள்ள பல கிராமங்களில் இன்னும் வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் இல்லை. இந்த இடைவெளியை போக்குவதற்கு தனது அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும், அந்தந்த கிராமங்களில் வெங்கடேஸ்வரருக்கு கோயில்களைக் கட்டுவதற்காக நிதி திரட்ட ஒரு பிரத்யேக அறக்கட்டளையை நிறுவப்படும். இந்த அறக்கட்டளை கடவுளின் சேவைக்காக மட்டுமே உருவாக்கப்படும். மனித குலத்திற்கு சேவை செய்வது தெய்வங்களுக்கு சேவை செய்வது போன்றதுதான். கிராமங்களில் உள்ள கோயில்களிலும் சேவை செய்ய வேண்டும்.

மேலும், நாட்டின் அனைத்து தலை நகரங்களிலும், உலகளவில் கணிசமான இந்து மக்கள் தொகை கொண்ட பகுதிகளிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்களைக் கட்ட ஆந்திரம் அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வர் அறிவித்தார். இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு கோரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார். இன்றுவரை பக்தா்கள் எஸ்.வி. அன்னதானம் அறக்கட்டளைக்கு ரூ.2,200 கோடியை நன்கொடையாக அளித்துள்ளனா்.

பிறப்பு, இறப்பு பதிவேடுகளுடன் வாக்காளா் பட்டியலை இணைக்க வாய்ப்பு

ஏழு மலைகளும் வெங்கடேஸ்வரருக்குச் சொந்தமானது

மேலும், திருமலை ஏழுமலையான் கோயில் உள்ள ஏழு மலைகளும் முழுமையாக வெங்கடேஸ்வரருக்குச் சொந்தமானது. அதனை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய முதல்வர், திருப்பதி தேவஸ்தானத்தில் எந்த வணிக ரீதியான கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படக் கூடாது. கோயில் அமைந்துள்ள புனித மலைகளுக்கு அருகில் எந்த வணிக நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது. முந்தைய ஆட்சியில் மலை அடி அடிவாரத்தில் தனியார் ஓட்டல்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 35.27 ஏக்கர் நிலம் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படும். புனித தலத்தை இழிவுபடுத்தவோ அல்லது வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவோ கூடாது.

திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் அனைவரும் வெங்கடேஸ்வரரின் இருப்பிடத்தின் புனிதத்தைப் பாதுகாப்பதில் முன்னிருக்க இருக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட நலன் சார்ந்த செயல்களைத் தவிர்க்க வேண்டும். புனிதத்தைப் பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தில்லி நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு!

இந்துக்களுக்கு மட்டுமே பணி

தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்திய முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் தற்போது கோயிலில் பணிபுரிந்தால், அவர்களது உணர்வுகள் புண்படுத்தப்படாமல் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும், மத நிறுவனங்களில் அந்தந்த மதங்களைப் பின்பற்றுபவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

"பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களில் பணி செய்வதில்லை. ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையின் மதத் தலங்களில் அந்த நம்பிக்கையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்" என்று நாயுடு கூறினார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் வந்தது சரி, பிரதமர் எப்போது வருவார்?காங்கிரஸ் கேள்வி!

மணிப்பூர் வருகை தந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவைக் காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் வரவேற்றார் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எப்போது மாநிலத்திற்கு வருகை தருவார் என்ற கேள்வியை எழுப்பினார். தனியார் செ... மேலும் பார்க்க

இந்தியாவில் புயலை ஏற்படுத்தும் குரோக்; சிரிக்கும் மஸ்க்!

இந்தியாவில் குரோக் புயலைத் தூண்டுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் சிரிப்பது போன்று பதிவிட்டுள்ளார்.டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் செயல் நுண்ணறிவுத் தளமான குரோக் சாட்போட், இந்தியாவில் பிரச்னைகளைத் ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஓய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும... மேலும் பார்க்க

ஒடிசா: நாள்தோறும் 3 குழந்தை திருமணங்கள்!

ஒடிசாவில் கடந்த 6 ஆண்டுகளாக தினசரி 3 குழந்தை திருமணங்கள் நிகழ்த்தப்படுவதாக மாநில அரசின் தரவறிக்கையில் கூறியுள்ளது.ஒடிசா மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளாக, நாள்தோறும் குறைந்தது 3 குழந்தை திருமணங்கள் நிகழ்த... மேலும் பார்க்க

மம்தா பானர்ஜியின் இங்கிலாந்து பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இங்கிலாந்து பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, முதல்வர் மம்தா மற்றும் அவரது குழுவினரும் இன்று காலை 9.10 மணிக்கு கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டு முதல... மேலும் பார்க்க

மோசமான சாலைகளுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்? மத்திய அரசுக்கு ராஜஸ்தான் எம்.பி. கேள்வி!

தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்க வரிகளுக்கு ஏற்றாற்போல சாலைகள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் ராஜஸ்தான் எம்.பி. ஹனுமான் பெனிவால் கேள்வி எழுப்பினார்.தேசிய நெடுஞ்சாலை 48 வழியாக ஜெய்ப்பூர் - டெல்லி நெடுஞ்சாலையி... மேலும் பார்க்க