நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தற்கொலையா? விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது சிபிஐ!
மம்தா பானர்ஜியின் இங்கிலாந்து பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இங்கிலாந்து பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, முதல்வர் மம்தா மற்றும் அவரது குழுவினரும் இன்று காலை 9.10 மணிக்கு கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டு முதலில் துபை செல்லவிருந்தனர். மீண்டும் அதே துபையிலிருந்து இரவு 8 மணிக்கு லண்டன் செல்லவிருந்தனர்.
வெள்ளியன்று பிற்பகல் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல்வரின் பயணம் இரண்டு நாள்களுக்கு ஒத்திவைக்கப்படலாம் என்ற மாநில செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், அங்கு நிலைமை சீரடைந்ததையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா இன்று மாலை இங்கிலாந்து செல்லவிருக்கின்றார்.
மார்ச் 24 அன்று லண்டன் செல்லும் மம்தா இந்தியத் தூதரகம் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அதன் பிறகு மார்ச் 25 அன்று தொழிலதிபர்கள், வணிகர்களைச் சந்திக்க உள்ளார். மார்ச் 26ல் வணிகம் கூட்டத்தில் பங்கேற்கிறார். மார்ச் 27ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரியில் உரையாற்றுகிறார். இறுதியாக, மார்ச் 28ல் அவர் லண்டனிலிருந்து கொல்கத்தாவுக்குப் புறப்படுகிறார்.
முன்னதாக, 2015இல் மம்தா பானர்ஜி இங்கிலாந்து சென்றார். அப்போதைய மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா உள்பட அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் அவருடன் இருந்தனர்.