கேரளம்: தேநீர் என நம்ப வைத்து 12 வயது சிறுவனுக்கு மது கொடுத்த பெண் கைது
கேரளத்தில் தேநீர் என நம்ப வைத்து 12 வயது சிறுவனுக்கு மது கொடுத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் பீருமேடு பகுதியில் உள்ள தனது வீட்டில் பெண் ஒருவர் கருப்பு தேநீர் என்று 12 வயது சிறுவனை நம்ப வைத்து மது கொடுத்துள்ளார்.
சிறுவனின் குடும்பத்தினருக்கு நீண்ட காலமாகத் தெரிந்த அந்தப் பெண், வெள்ளிக்கிழமை மதியம் இந்த சம்பவத்தை செய்துள்ளார்.
மது அருந்திய சிறுவன், தனது சொந்த வீட்டை அடைந்ததும் மயக்கமடைந்தான். சிறுவன் பின்னர் தனது பெற்றோரிடம் உண்மையை கூறியுள்ளான். உடனே அவர்கள் அந்தப் பெண்ணுக்கு எதிராக பீருமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து அந்தப் பெண்ணை கைது செய்த காவல்துறையினர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நாடாளுமன்றத்தில் தென் மாநில பிரதிநிதித்துவம் குறைய விடமாட்டோம்! -முதல்வர் ஸ்டாலின்
குற்றம் சாட்டப்பட்டவர் மலாமலையைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளி பிரியங்கா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.