செய்திகள் :

கடந்த 4 ஆண்டுகளில் 6,597 படுகொலைகள்: அன்புமணி

post image

திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6,597 படுகொலைகள்  சம்பவங்கள் நடந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:

”மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற ரெளடி நள்ளிரவில் அவரது வீட்டு வாயிலில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் திட்டமிட்ட படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் அதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் மதுரை மாநகர திமுக நிர்வாகி வி.கே.குருசாமியின் உறவினர் ஆவார். அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. காளீஸ்வரனுக்கும், அவரது எதிர் குழுவினருக்கும் இடையே தொடர்ந்து நடந்து வரும் மோதலில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த படுகொலையும் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காளீஸ்வரனின் எதிரிகள் சிறையில் இருந்த படியே சதித்திட்டம் தீட்டி இந்தக் கொலையை நடத்தியிருப்பதாகவும் தெரிகிறது.

இதையும் படிக்க: இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் மூத்த அரசியல் தலைவர் பலி!

தமிழ்நாட்டில் கொலைகள் நடக்கும் போதெல்லாம் அவை தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டது என்றும், கொலையாளிகளை விரைவாக கைது செய்து விட்டோம் என்றும் கூறி சிக்கலை திசை திருப்புவதையே திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.

ஆனால், காளீஸ்வரன் விவகாரத்தில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரிந்தும் கூட, சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதித் திட்டத்தை முறியடிக்க முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 4.52 படுகொலைகள் வீதம் திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6597 படுகொலைகள் நடந்துள்ளன.

இந்த எண்ணிக்கை அச்சமூட்டும் வகையிலும், கவலையளிக்கும் வகையிலும் இருக்கும் போதிலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைத் தடுத்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் திமுக அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது. இனியாவது திமுக அரசு அதன் உறக்கத்தைக் கலைத்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை '0' என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக கனிமொழி தன்னுடைய ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: அண்ணாமலை

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சா் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணா... மேலும் பார்க்க

மதுரையில் காவலர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்!

மதுரையில் காவலர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் சுட்டுப் பிடிக்கப்பட்டார். கைதான ஆட்டோ ஓட்டுநர், பணத்துக்காக காவலரை எரித்துக் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.கடந்த 19 ம... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்கள் நியமனம்: அமைச்சர் கீதாஜீவன் முக்கிய அறிவிப்பு!

சட்டப்பேரவையில் சத்துணவு ஊழியா்கள் நியமனம் தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில... மேலும் பார்க்க

குடும்ப அட்டை வைத்திருக்கிறீர்களா? இன்னும் ஒரு சில நாள்களே உள்ளன!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆ... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

யூடியுபர் சவுக்கு சங்கர் வீட்டில் துய்மைப் பணியாளர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில் அந்த சம்பவத்திற்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். யூடியுபர் சவுக்க... மேலும் பார்க்க