செய்திகள் :

ரிலையன்ஸ் உடன் ஓபன் ஏஐ, மெட்டா பேச்சுவார்த்தை!

post image

இந்தியாவில் செய்யறிவு தொழில்நுட்பத்தை (ஏஐ) மேம்படுத்துவதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஓபன் ஏஐ மற்றும் மெட்டா நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில், ரிலையன்ஸ் உடன் சேர்ந்து செய்யறிவு தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதற்காக வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம் சேட்ஜிபிடி என்ற செய்யறிவு தொழில்நுட்பத்தை கடந்த 2022ஆம் ஆண்டு உருவாக்கியது. இதன் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதேபோன்று மெட்டா நிறுவனமும் மெட்டா ஏஐ என்ற செய்யறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் தங்கள் செய்யறிவு தொழில்நுட்பப் பயன்பாட்டை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளன.

இந்தியா போன்ற மிகப்பெரிய மற்றும் அதிக இளைஞர்களைக் கொண்ட சந்தையில் செய்யறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகம் என்பதால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் அதனை விரிவுபடுத்த இந்த இரு நிறுவனங்களும் அம்பானியுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.

மக்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் சேட்ஜிபிடி-க்கான சந்தா மானியத்தைக் குறைக்க தனது நிறுவன ஊழியர்களுடன் ஓபன் ஏஐ பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போது மாதத்திற்கு 20 டாலர்கள் (ரூ. 1,720) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையில் சந்தாவுக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து பேசவில்லை எனத் தெரிகிறது. இதன்மூலம் ரிலையன்ஸ் உடன் சேர்ந்தால், கட்டண குறைப்பின்றி அதிக மக்களை சென்றடைய முடியும் என ஓபன் ஏஐ கருதுவதாகத் தெரிகிறது.

ஓபன் ஏஐ மாடல்களை ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்காக விற்பனை செய்வது குறித்து முகேஷ் அன்பானியுடம் விவாதித்ததாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதையும் படிக்க | ஏப். 1 முதல் யுபிஐ சேவை நிறுத்தம்!

இதையும் படிக்க | சொல்லப் போனால்... நகைக் கடன் ஏலங்களும் லட்சம் கோடி தள்ளுபடிகளும்!

அதிநவீன கண் மருத்துவமனை அமைக்க ரூ.110 கோடி முதலீடு செய்யும் சங்கரா அறக்கட்டளை!

புதுதில்லி: பாட்னாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை அமைக்க சங்கரா கண் அறக்கட்டளை ரூ.110 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.பாட்னாவின் உள்ள கன்கர்பக்கில் 1.60 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள... மேலும் பார்க்க

வெங்காயத்தின் மீதான 20% ஏற்றுமதி வரி நீக்கம்: சிவராஜ் சிங் சௌகான்

புதுதில்லி: ஏப்ரல் 1 முதல் வெங்காய ஏற்றுமதி மீதான 20 சதவிகித சுங்க வரியை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்றார் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்.இனி வெங்காய ஏற்... மேலும் பார்க்க

மஹிந்திராவின் புதிய மின்சார கார்! ஒருமுறை சார்ஜ் செய்தால் 682 கி.மீ. பயணம்!

மஹிந்திராவின் பிஇ - 6 என்ற புதிய மின்னணு வாகனத்தை முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை மஹிந்திரா நிறுவனம் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகமான இந்த வாகனம், ரூ. 18.90 லட்சத்... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட செய்யறிவு (ஏஐ) அம்சங்களுடன் சாம்சங் கேலக்சி ஏ 26!

மேம்படுத்தப்பட்ட செய்யறிவு தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய கேலக்சி ஏ 26 ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.தென்கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்ட சாம்சங் நிறுவனம் ஏ வரிசையில் (சீரிஸ்) தொடர்... மேலும் பார்க்க

எஃப்.ஐ.ஐ முதலீடுகளால், 6 வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து முடிவு!

மும்பை: அந்நிய நிதி வரத்தும், உள்ளநாட்டில் முதலீட்டாளர்கள் வங்கி, எண்ணெய் & எரிவாயு பங்குகளை வாங்கி குவித்ததால், பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று 1 சதவிகிதத்திற... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.85.86-ஆக முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.85.86 ஆக முடிந்தது.வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.93 ஆக தொடங்கி ... மேலும் பார்க்க