செய்திகள் :

ரோபோ சங்கர் பேரனுக்கு பெயர் வைத்த கமல்ஹாசன்; இந்திரஜாவின் நெகிழ்ச்சிப் பதிவு

post image

`பிகில்' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கார்த்திக் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு இந்திரஜா மற்றும் கார்த்திக் இருவரும் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஜோடியாகக் கலந்து கொண்டனர்.

இந்திரஜா - கார்த்திக்

அந்த நிகழ்ச்சியில் இவர்கள் கலந்துகொண்ட சில வாரங்கள் கடந்ததும் இந்திரஜா கர்ப்பமாக இருந்தார். இதனால் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே இந்திரஜாவும் அவருடைய கணவரும் வெளியேறிவிட்டனர். அவர்களுக்கு சமீபத்தில்தான் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் இந்திரஜா - கார்த்திக்கின் குழந்தைக்கு நடிகர் கமல்ஹாசன் 'நட்சத்திரன்' என்று பெயர் வைத்திருக்கிறார். இதனை இந்திரஜா- கார்த்திக் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " எங்களுடைய வாழ்க்கையின் அர்த்தமான எங்கள் மகனுக்கு...உலக நாயகன், நம்மவர், அன்பு தலைவர், பத்ம பூஷன் Dr. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள் தம்பிக்கு “நட்சத்திரன்” என பெயரிட்டு வாழ்த்தினார்...என்றும் உங்கள் அன்புடன்எங்கள் நட்சத்திரன் கார்த்திக்.." என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

Serial Update: கர்ப்பமானதை அறிவித்த சின்னத்திரை ஜோடி; மீண்டும் வில்லியாகக் களம் இறங்கும் ஃபரீனா!

சன் டிவியில் தொகுப்பாளராகப் பரிச்சயமானவர் அஷ்வத். இவருக்கும்சின்னத்திரை நடிகை கண்மணிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றிருந்தது. இந்த தம்பதி பெற்றோர்கள் ஆக இருக்கும் செய்தியை அவர்களுடைய ரசிகர்களுக்கு ... மேலும் பார்க்க

Siragadikka Aasai : ரோகிணி சிக்கியது கனவா? நிஜமா? - பரபர புரொமோ

சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரத்திற்கான புரொமோவில் ரோகிணி பற்றிய உண்மைகளை மணி வீட்டில் சொல்லிவிடுகிறார்.கடந்த எபிசோடில் முத்து-மீனா மண்டபத்தில் இருந்த மோசடி தம்பதியை கண்டுபிடித்துத் துரத்துகின்றனர்.... மேலும் பார்க்க

Baakiyaalakshmi : `கதாபாத்திரத்தை புரிஞ்சுகோங்க பாஸ்'- மாஸ் காட்டிய இனியா; அதிர்ந்து போன குடும்பம்

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரம் ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் நெகடிவ்வாக சித்தரிக்கப்பட்டு வந்தது. டீன் ஏஜ் பெண்ணான இனியா அடிக்கடி ரிலேஷன்ஷிப் பிரச்னைகளில் மாட்டிக்கொள்வார். நண்பர்களுடன் பார... மேலும் பார்க்க

`சிறகடிக்க ஆசை டு பாஸ் (எ) பாஸ்கரன் ரிலீஸ் வரை' - அனுபவங்கள் பகிரும் குரு சம்பத்குமார்

ஹீரோக்களின் நண்பனாய் சந்தானம் காமெடியில் ரகளை செய்த படங்களுக்கு மீண்டும் மீண்டும் வரவேற்பை அள்ளும் சீஸன் இதுபோல. 12 ஆண்டுகளுக்குப் பிறகு 'மதகஜராஜா' ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றதால், சந்தானத்துடன் இணைந்... மேலும் பார்க்க

Ayyanar Thunai: இது தரமான ப்ரோபோசல்... வாயடைத்துப் போன சேரன்; திடீர் கல்யாணத்தில் பரபர!

தன் சகோதரர்களுடன் வாக்குவாதம் செய்த பின்னர் சோழன் ரிசப்ஷனுக்கு சம்மதிக்கிறார். 'அய்யனார் துணை' சீரியலின் நேற்றைய எபிசோடில் சோழன் - நிலா ரிசப்ஷனுக்காக வீட்டில் அனைவரும் மும்முரமாக ஏற்பாடுகள் செய்கின்றன... மேலும் பார்க்க

நடிப்பை விட்டுட்டு சொந்த ஊருக்கே போயிட்டேனா? `சரவணன் மீனாட்சி' இர்ஃபான்|இப்ப என்ன பண்றாங்க பகுதி -1

ஒரு காலத்தில் ஸ்க்ரீனில்பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டவங்கஇவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா, சூழ்நிலையா தெரியாது.. இப்போது மேக்-அப், ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். 'இ... மேலும் பார்க்க