பவானி ஆற்றங்கரையில் சாய ஆலைக்கு அனுமதி ஏன்?: அமைச்சா் தங்கம் தென்னரசு
``மக்களிடமிருந்து பெறும் அன்பை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை'' - மணிகண்டன் உருக்கம்
'குட் நைட்', 'லவ்வர்' மற்றும் சமீபத்தில் வெளிவந்த 'குடும்பஸ்தன்' என மூன்று வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் நடிகர் மணிகண்டன். 3 படங்களும் 50 நாள்களைக் கடந்து வெற்றி நடை போட்டதை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ``மக்களிடமிருந்து நான் பெறும் அன்பை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஒரு சிறிய திரைப்படம் திரையரங்குகளில் 50 நாள்கள் ஓடியதைக் கொண்டாடுவது மிகப்பெரிய வெற்றி மற்றும் சாதனையாகும். ஒரு முறை, இரண்டு முறை அல்ல, மூன்று முறை. அதை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றி.
நீங்கள் எங்களுக்கு கொடுக்கும் அன்பு எப்போதும் எங்களுடன் இருக்கும். என் மீது நம்பிக்கை வைத்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல இயக்குநர்களுக்கும், இந்த படங்கள் வெற்றி பெற உழைத்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னையும் என் நடிப்பையும் ஏற்றுக்கொண்ட அனைத்து மக்களுக்கும் எனது நன்றிகள்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.