KKR vs RCB: ஸ்டம்ப் எகிறியும் சுனில் நரைன் `நாட் அவுட்' ஏன்? - காரணம் இதுதான்
ஐபிஎல் 18வது சீசன் இன்று தொடங்கியுள்ளது. 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்தத் தொடரின் தொடக்க விழா கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடுகின்றன.

முதலில் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது ஆர்சிபி. பேட்டிங்கில் களம் இறங்கிய கொல்கத்தா அணியின் முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. கொல்கத்தா அணியின் ஓப்பனர் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் 4 ரன்களில் அவுட்டானார்.
ஏழாவது ஓவரின் நான்காவது பந்தில், சுனில் நரைனுக்கு ஒரு ஷார்ட் பால் வீசப்பட்டது. ஆனால் அவர் அதை ஃபுல் ஷாட் அடிக்க முயற்சி செய்து தவறவிட்டார். அவர் அந்தப் பந்தைத் தவறவிட்ட பிறகு ரீப்ளேவில் பேட்டானது ஸ்டம்பிங்மீது பட்டது தெரிந்தது. அம்பயரால் இந்த பந்து வைட் என சிக்னல் செய்யப்பட்டது. ரஜத் படிதார் ரிவ்யூ எடுக்க தனது அணியை வற்புறுத்தினார்.

Out -ஆ? Not Out -ஆ?
பந்து ஏற்கெனவே டெட் ஆகிவிட்டதாகத் சொல்லப்படுகிறது. நடுவர் அதை வைட் என்று அறிவித்துவிட்டார். அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் ஆட்டத்தில் கருத்தில் கொள்ளப்படாது. எனவே, ஆர்சிபி ஹிட் விக்கெட்டுக்காக ரிவியூ கேட்டிருந்தாலும் நாட் அவுட் என்று தான் வந்திருக்கும். இருந்தாலும் RCB ரசிகர்கள் இது அவுட் தான் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.