2025-26 ஆம் ஆண்டுக்கான ஐசிசி நடுவர்கள் விவரம்! புதுமுகங்கள் இருவருக்கு வாய்ப்பு!
அனுபமாவின் பரதா படத்தின் முதல் பாடல்!
நடிகை அனுபமா நடித்துள்ள பரதா படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி படத்தில் அறிமுகமான அனுபமா தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.
பிரபலமான இயக்குநர் பிரவீன் கந்த்ரெகுலா இயக்கியுள்ள பரதா படத்தின் டீசர் வெளியானது.
இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முக்கியக் கதாபாத்திரமாக சுப்புவாகவும், நடிகை சங்கீதா, ஜெய ஜெய ஜெய ஜெய ஹே பட நடிகை தர்ஷனா ராஜேந்திரனும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
கிராமங்களில் பெண்கள் பரதா அணிவது, அவர்களை அடிமைகளாக சித்திரிக்க ஆண்கள் கொண்டுவந்த வழக்கம் என்று கூறப்படுகிறது.
பரதா படத்திலும் பரதா அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பெண்களின் நிலையை கதைக்கருவாகக் கொண்டு கதை நகர்கிறது.
இந்நிலையில் இதன் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.