செய்திகள் :

பிரபல நடிகரைக் காதலிக்கும் ரிது வர்மா?

post image

நடிகை ரிது வர்மா பிரபல நடிகரைக் காதலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரிது வர்மா. தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

இவர் நடிகர் விக்ரமுடன் நடித்த துருவ நட்சத்திரம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதையும் படிக்க: ‘மம்மூட்டி நலமாக உள்ளார். ஆனால்..’: மோகன்லால்

இந்த நிலையில், ரிது வர்மா தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ்ஜை காதலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனான வைஷ்ணவ் தேஜ் உப்பென்னா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தற்போது, தொடர்ந்து நடித்து வருகிறார்.

ரிது வர்மா - வைஷ்ணவ் தேஜ்

இவரும் ரிது வர்மாவும் இணைந்து எந்தப் படத்திலும் நடித்ததில்லை. ஆனால், நண்பர்களின் விருந்துகளில் சந்தித்து நண்பர்களானதாகவும் பின் சில மாதங்களாக இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இருவரும் திருமணம் செய்துகொள்ளும் திட்டத்திலும் இருக்கிறார்களாம்.

நடிகர் வைஷ்ணவ் தேஜ்ஜை விட ரிது வர்மா 5 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே ஸ்பான்ஸா் ஆன ரீஃபெக்ஸ்

பல்வேறு துறைகளில் தொழில் செயல்பாடுகளை மேற்கொண்டுவரும் குழுமங்களில் ஒன்றான ரீஃபெக்ஸ், சென்னை சூப்பா் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் அதிகாரபூா்வ ஸ்பான்ஸா் ஆகியுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க

உலக கன்டென்டா் டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் சரத் கமல்-சினேஹித்

உலக கன்டென்டா் டேபிள்டென்னிஸ் போட்டி இரட்டையா் காலிறுதிக்கு இந்தியாவின் சரத் கமல்-சினேஹித் சுரவஜுலா தகுதி பெற்றனா். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் இரட்டையா் ரவுண்ட் 16 சுற்றி... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.நடிகர் விமல் நடித்துள்ள இணையத் தொடரான ‘ஓம் காளி ஜெய் காளி’ நாளை(மார்ச் 28) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத... மேலும் பார்க்க

துக்க நிகழ்வுகளை ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்

ஊடகங்களில் துக்க நிகழ்வுகளை ஒளிபரப்ப வேண்டாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,“ஊடக நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்.அன்பிற்குர... மேலும் பார்க்க

20 ஆண்டுகால கால்பந்து பயணம்..! ஸ்பானிஷ் வீரர் நெகிழ்ச்சி!

ஸ்பானிஷ் கால்பந்து வீரர் செர்ஜியோ ராமோஸ் தனது 20 ஆண்டு கால்பந்து பயணம் குறித்து இன்ஸ்டாவில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். 38 வயதாகும் செர்ஜியோ ராமோஸ் சென்டர்-பேக் பொசிஷனில் விளையாடுவார். உலகின் மிக... மேலும் பார்க்க