2025-26 ஆம் ஆண்டுக்கான ஐசிசி நடுவர்கள் விவரம்! புதுமுகங்கள் இருவருக்கு வாய்ப்பு!
தமிழில் பேசிய ரவி சாஸ்திரி..! அதிர்ந்த சேப்பாக்கம் திடல்!
சிஎஸ்கே போட்டியின்போது டாஸை சுண்டும்போது ரவி சாஸ்திரி தமிழில் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இரு அணிகளுமே 5 முறை ஐபிஎல் கோப்பை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் டாஸை சுண்டும்போது ரவி சாஸ்திரி முதலில் நான்கு வார்த்தைகளை தமிழில் பேசி அசத்தினார்.
அவர் பேசியதாவது:
’வணக்கம் சென்னை. எப்படி இருக்கீங்க?’ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இருப்பது நன்றாக இருக்கிறது. ஐபிஎல்லின் 2 ஜெயண்ட்ஸ் இன்று விளையாடுகிறார்கள்.
இரண்டு பேரும் சேர்ந்து 10 கோப்பைகளை வென்றுள்ளார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உருதுராஜும் மும்பை அணிக்கு சூர்யகுமாரும் தலைமை தாங்குகிறார்கள்.
போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத், டாஸினை எடுத்துக் கொடுப்பவர் ஷில்பா. டாஸினை ருதுராஜ் சுண்ட சூர்யகுமார் யாதவ் தலை எனக் கேட்க பூ விழுந்தது. என்னச் செய்யப் போகிறீர்கள் ருதுராஜ்? வாழ்த்துகள் என்றார்.
தற்போது, மும்பை அணி 21/2 ரன்கள் எடுத்துள்ளது.
Ravi Shastri kicking it off...
— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2025
CSKvMI
At Anbuden!
It doesn't get any better than this!
pic.twitter.com/O5FA7BPb5t