`3-வது டிரைமெஸ்டர்ல செக்ஸ் வெச்சுக்கிட்டா சுகப்பிரசவம் நடக்குமா?' - காமத்துக்கு ...
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக விரும்புகிறாரா ககிசோ ரபாடா?
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவது குறித்து அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா மனம் திறந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்கள் கேப்டனாக அணியை வழிநடத்துவது ஒரு சில அணிகளில் மட்டுமே காணப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியை வேகப் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் வெற்றிகரமாக கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவ்வப்போது இந்திய அணியை டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் புதிய சாதனை!
வாய்ப்பு கிடைத்தால்...
பாட் கம்மின்ஸ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற வேகப் பந்துவீச்சாளர்கள் அவர்களது தேசிய அணிகளை வழிநடத்தி வரும் நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தன்னை கேப்டனாக செயல்படுமாறு கூறினால், அதற்கு தீவிரமாக கவனம் கொடுப்பேன் என தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்ற கேள்வி அதிகமாக என்னிடம் கேட்கப்படுகிறது. அந்த கேள்விகள் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்படுவது குறித்து என்னை சிந்திக்க வைக்கிறது. ஆனால், அந்த கேள்விகளை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியமோ அல்லது பயிற்சியாளர்களோ என்னிடம் கேட்டால், கேப்டன் பொறுப்பு குறித்து தீவிரமாக கவனம் கொடுப்பேன் என்றார்.
இதையும் படிக்க: ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனையை நிகழ்த்திய ஆர்ச்சர்!
தென்னாப்பிரிக்க அணிக்காக 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ககிசோ ரபாடா 327 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 168 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 71 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.